பக்கம்:இறைவர் திருமகன்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

அருவருக்கத்தக்க உண்மையை வாய்விட்டுக் கூறினான்.

"பெருமானே, உண்மையில் நான் ஒரு பாவி, என் செல்வம் அனைத்தும் தீயவழியில் சேர்க்கப்பட்டவை. பெருமானே, என் சொத்துக்களில் பாதியை நான் ஏழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன். தவறான முறையில் நான் சேர்த்த ஒவ்வொரு காசுக்கும் நான்கு காசு திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று இயேசுநாதரின் முன் வீழ்ந்து வணங்கினான்.

"அப்பா, நீ உண்மையிலேயே திருந்திவிட்டாய்! ஆண்டவன் உன்னை மன்னிப்பார்" என்று திருவாய் மலர்ந்து அருள் புரிந்தார் இயேசுநாதர்.

வீட்டுக்கு வெளியே நின்ற யூதர்களோ, பாவியொருவன் வீட்டிலே சென்று இயேசு நாதர் தங்குவதைப் பற்றித் தமக்குள் வெறுப்புடன் பேசிக் கொண்டனர். அவருக்குத் தங்குவதற்கு வேறு இடமா கிடைக்கவில்லை என்று கேட்டுக் கொண்டனர்.

சாச்சியஸ் வீட்டில் ஒரே மகிழ்ச்சி ஆரவாரமாயிருந்தது. தன் பாவங்களை யெல்லாம் அவன் உணர்ந்து ஒப்புக்கொண்டு விட்டான்