பக்கம்:இறைவர் திருமகன்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

வீணாக்கி விட்டாளே; என்ன மூடத்தனம்!" என்று அவன் நினைத்தான்.

"முந்நூறு பென்சுக்கு அதை விற்றிருக்க முடியும். அவ்வாறு விற்றிருந்தால் எத்தனை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம்!" என்று அவன் முணுமுணுத்தான்.

மேரியின் அன்பு நிறைந்த முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இயேசுநாதர் தம் கண்களை இருண்ட முகத்துடன் இருந்த அச்சீடனின் பக்கம் திருப்பினார்.

“அவளை ஒன்றும் சொல்லாதீர்கள். அவள் ஒரு நற்செயலையே புரிந்தாள். ஏழைகள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள். நீங்கள் நினைத்தபோது அவர்களுக்கு நன்மை செய்யலாம். ஆனால், நான் எப்போதும் உங்களுடன் இருக்க முடியாதே!” என்று கூறினார் இயேசுநாதர்.

தாம் உலகில் இருக்கும் நாள் அதிகமில்லை என்பதை இயேசுநாதர் உணர்த்தினார். ஆனால் இவ்வாசகங்களின் பொருளைச் சீடர்கள் புரிந்து கொள்ளவில்லை.