பக்கம்:இறைவர் திருமகன்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

“ஐயா, தொழுவத்திலே வேண்டுமானால் சிறிது இடம் ஒதுக்கித் தருகிறேன். இரவுப் பொழுது அங்கே நீங்கள் தங்கிக்கொள்ளலாம்” என்றான்.

ஜோசப் நன்றியறிதலோடு சத்திரக்காரனைப் பின் தொடர்ந்தான். ஒட்டகங்களும் கழுதைகளும் கட்டிக் கிடந்த தொழுவத்தின் ஒரு புறத்தைக் காட்டினான். ஜோசப் மகிழ்ச்சியோடுமேரியை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

தெருவில் நிற்காமல் இந்த இடமாவது கிடைத்ததே என்ற நிறைவு ஒருபுறம்; மனித நெருக்கடியுள்ள சத்திரத்தை விட, தனிமையும் அமைதியுமுள்ள இடம் அல்லவா இது என்ற அமைதி ஒரு புறம், தொழுவத்தில் கிடந்த வைக்கோலை எடுத்து ஓரிடத்தில் பரப்பினான். அதன் மேல் ஒரு விரிப்பை விரித்தான். மேரியை அதன் மீது படுத்துக் கொள்ளச் சொன்னான்.

சுகமான மெத்தைதான். ஆனால், அன்று இரவு அவர்கள் தூங்க முடியாமல்தான் போய்