பக்கம்:இறைவர் திருமகன்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

பீட்டரும் ஜானும் ஜெருசலம் நகருக்கு விரைந்து சென்றார்கள். அங்கே ஒரு கிணற்றடியில் பெண்கள் தண்ணீர் பொண்டு சென்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அந்தப் பெண்களினிடையே ஓர் ஆடவன் குடத்தில் தண்ணீர் மொண்டு செல்லும் நடைமுறையில் இல்லாத காட்சியையும் கண்டார்கள். அந்த மனிதனைத் தொடர்ந்து சென்று, அவனுடைய தலைவனைச் சந்தித்தார்கள். இயேசு நாதர் கூறியபடி அவர்கள் கெட்டவுடன் அந்த வீட்டுக்காரன் மகிழ்ச்சியுடன் தன் வீட்டின் பெரிய அறை ஒன்றை அவர்களுக்குக் காண்பித்தான்.

விருந்துண்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த அறையில் எல்லாம் ஆயத்தமாக வைக்கப்பட்டன.

இயேசுநாதர் தம் சீடர்களுடன் அங்கு வந்து சேர்ந்தார்.

எல்லாரும் அமர்ந்து விருந்துண்ணும் போது அவர் மனவருத்தத்துடன் இருப்பது போல் காணப்பட்டார். சீடர்கள் அதைக் கவனித்தவுடன் அவர் தம் துயரத்தின் காரணத்தை வாய்திறந்து கூறினார்.