பக்கம்:இலக்கண வரலாறு.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218


கண்டவன் மருமான் காரிகைக் குளத்தூர்க்
   காவலன் நிலாவினான் எவர்க்கும்
கருணையும் நிதியும் காட்டிய மிழலை
   நாட்டுவேள் கண்டன் மாதவனே"

என்பது முதற்பாட்டின் பின்னிரண்டடிகள். அடுத்த பாட்டில்,

"அமுத சாகரன் நெடுந்தமிழ் தொகுத்த
காரிகைக் குளத்தூர் மன்னவன்"

என்னும் குறிப்புளது.

முதற் குலோத்துங்கன் காலத்து வாழ்த்தவன் கண்டன் மாதவன் என்பான். அவன் சோழன் தலைமையில் குளத்தூர் மன்னனாக - சிற்றரசனாக - விளங்கினான்; அவன் காலத்தில் குளத்தூர் காரிகைக் குளத்தூர் என வழங்கப் பெற்றது. அவன் முன்னோருள் ஒருவன் அமிதசாகர முனிவரைக் குளத்தூர்க்கு அழைத்து இருக்கச் செய்து காரிகை நூல் இயற்றுவித்தான். இச்சிறப்பால் அவ்வூர் காரிகைக் குளத்தூர் எனப்படலாயிற்று. காரிகைக் குளத்தூர் செயங் கொண்ட சோழ மண்டலத்துச் சிறுகுன்ற நாட்டு மிழலைச் சேர்ந்த ஊராக இருந்தது என்பவை முன்னே குறித்த கல்வெட்டுப் பாடல்கள் இரண்டன் முழுமையாலும் அறியப்படுகின்றன.

காலம்

செயங்கொண்ட சோழன் என்பவன் முதல் இராசராசன். அவன் பெயராலேயே தொண்டை நாடு செயங்கொண்ட சோழமண்டலம் எனப்பெயர் பெற்றது. ஆதலால் அவ்விராசராசன் காலத்திலேயே அமிதசாகரர் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாம். அவன் ஆட்சிக்காலம் கி. பி. 985 - 1014 என்க. இதனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/263&oldid=1473335" இலிருந்து மீள்விக்கப்பட்டது