பக்கம்:இலக்கண வரலாறு.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

241

“பூமேல் உரைப்பன் வடநூன் மரபும் புகன்றுகொண்டே”

என்னும் பாயிரத்தால் (3) விளங்கும்.

சமயம்

புத்தமித்திரனார் என்னும் பெயர் கொண்டே இவர் தம் சமயம் அறியவரும். அன்றியும், “போதியின் மேதக் கிருந்தவன்..பாதம் தலைமேற் புனைந்து தமிழுரைக்கப் புக்கவன், பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்த மித்திரனே” என்பதும் நிலைப்படுத்தும் (பாயி. 1). இவரூராகிய பொன்பற்றி மிழலைக் கூற்றம் சார்ந்ததென அறிய வருதலால் (179 மேற்.) இவர் பாண்டி நாட்டவராவர். இவரூர் அறந்தாங்கி வட்டத்தில் பொன்பேத்தி என வழங்குவது என்பர். (கல்வெட்டுகளால் அறியப்படும் உண்மைகள்)

“அவலோகிதன் என்பானிடத்து அகத்தியன் தமிழ் கேட்டு, அதனை உலகுக்கு வழங்கினான்” என்று பாயிரத்தில் வரும் செய்தியால் அவ்வாறு ஒரு கருத்து உலாவியமை அறிய வருகின்றது.

நூல் அளவு

வீரசோழியம் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பால் அமைந்தது. பெரும் பிரிவு ‘அதிகாரம்’ எனவும், உட்பிரிவு ‘படலம்’ எனவும் கூறப்பட்டுள்ளன. எழுத்ததிகாரத்தில் சந்திப்படலம் என ஒரு படலமும், சொல்லதிகாரத்தில் வேற்றுமைப்படலம், உபகாரகப் படலம், தொகைப் படலம், தத்திதப் படலம், தாதுப் படலம், கிரியா பதப்படலம் என ஆறுபடலங்களும், பொருளதிகாரத்தில் பொருட்படலம் என ஒரு படலமும், யாப்பதிகாரம், அலங்காரம் ஆகியவற்றில் முறையே யாப்புப் படலம், அலங்காரம் என ஒவ்வொரு படலமும் ஆக ஐந்ததிகாரங்களும் பத்துப் படலங்களும் உடையதாகஇ.வ-16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/286&oldid=1473817" இலிருந்து மீள்விக்கப்பட்டது