பக்கம்:இலக்கண வரலாறு.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

268

இந்திரகாளி என்னும் பாட்டியன் மரபின் வழிநூல் வெண்பாப்பாட்டியல் என்பதைப் பாயிரத்தில் குறிப்பிடும் உரையாசிரியர், உணாப்பொருத்தம் கூறுமிடத்தில் இந்திரகாளி நூற்பாக்கள் நான்கனையும் (முன்மொழி. 9), நாட்பொருத்தம் கூறுமிடத்தில் ஒரு நூற்பாவையும் (முன்மொழி. 10) மேற்கோள் காட்டியுள்ளார்.

காலம்

பாடப்படும் பொருள்பற்றி நூல் பெயர் பெறுவதற்கு இவர் கூர்மபுராணத்தை எடுத்துக் காட்டுதலால், அதிவீரராம பாண்டியன் காலத்திற்கு இவ்வுரையாசிரியர் பிற்பட்டவர் எனக் கொள்ளலாம். அதிவீரராம பாண்டியன் காலம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு. இதன் முதற்பதிப்பு 1900 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

பழைய பொழிப்புரை குறிப்புரை ஆகிய பழைய உரையுடன் புதிதாக வரையப்பட்ட விளக்கவுரையும் சேர்த்துக் கழகம் 1936-இல் வெளியிட்டது. இதற்கு விளக்கவுரை வரைந்தவர் கொ. இராமலிங்கத் தம்பிரான் ஆவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/313&oldid=1474236" இலிருந்து மீள்விக்கப்பட்டது