பக்கம்:இலக்கண வரலாறு.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41. அப்பைய தீட்சிதர் குவலயாநந்தம்


காளிதாசரால் இயற்றப்பட்ட வடமொழிச் சந்திராலோகத்திற்கு உரையெழுதினார் அப்பைய தீட்சிதர் (கி.பி 1520-1593). அவ்வுரை நூலுக்குக் குவலயாநந்தம் எனப் பெயரிட்டு வழங்கினார். அதனை எட்டையபுரம் அரசவை வட மொழிப் புலவர் சங்கர நாராயண சாத்திரியார் 1889இல் தமிழில் மொழி பெயர்த்தார். அப்பெயர்ப்பைத் தமிழ்ச் செய்யுள் வடிவில் அவ்வர சபைக் கவிஞராக விளங்கிய முகவூர் மீனாட்சி சுந்தரக் கவிராயர் செய்தார். இந்நூல் எட்டையபுர மன்னர் சகத்வீர ராம வேங்கடேசுவர எட்டப்பர் சிறிய தந்தையாரும் இளவரசருமாகிய வேங்கடேசுவர எட்டுப் பாண்டியன் வேண்டுதலால் உ. வே. சீனிவாசாசாரியார், ஆனூர் சிங்காரவேலு முதலியார் ஆகியவர்களால் 1895இல் பதிப்பிக்கப்பட்டது. அதன் இரண்டாம் பதிப்பு 1979இல் ச. வே. சுப்பிரமணியரால் கொண்டு வரப்பட்டது.

நூல்

‘சந்திராலோகம்’ என்பது மூலநூல் பெயராயினும், அப்பைய தீட்சிதர் கொண்டவாறே ‘குவலயாநந்தம்’ எனப் பெயர் பெற்றது. ஆதலால் அப்பொருளே பொருளாக உடையது என்பது வெளிப்படை.

இந்நூல் கட்டளைக் கலித்துறை யாப்பால் அமைந்தது. 167 பாடல்களையுடையது. தேவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/466&oldid=1474747" இலிருந்து மீள்விக்கப்பட்டது