பக்கம்:இலக்கண வரலாறு.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

றிய இலக்கணத்தும் எழுத்துப் புகுதலைப் போற்றினர் அல்லர். அவ்வாறாகவும் வடவெழுத்து ஆங்கில எழுத்துப்புக நூற்பா நூற்றல் முரண்முறை: அரண்முறையன்றாம். அன்றியும் தமிழனானிடமிருந்து எதிர்பார்க்கக் கூடாத முறை.

உரை கண்டாரும் நூலாசிரியரே.

அன்மை இன்மை வேறுபாட்டை எளிமையாக விளக்குகிறார்;

நூ: “இரண்டிலொன் றன்மையைக் குறிப்பு தன்மை

ஒன்றுமில் லாமையை உணர்த்தும் இன்மை” (334)

பொ: இரண்டு பொருளில் ஒன்று இன்றி மற்றதைக் குறிக்கும் அன்மைச்சொல். ஒன்றுமே இல்லாதமையை இன்னாச்சொல் உணர்த்தும்.
நு: இரு மறைச்சொற்களின் பொருள் வேறுபாட்டு நுணுக்கம் கூறுகிறது. பண்பளவாய்க் கூறிய இன்மை, இன்று இல்லை என்றும் வரும். அன்மையும் அவ்வாறே.
சா:

“நினக்கு நல்லையும் அல்லை”.
“நதியின் பிழையன்று”
“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்”

என்பன பா.

“என்னிடம் இருப்பது ஐந்தன்று; இரண்டு.” என்பது செம்மை. ஐந்தில்லை இரண்டுண்டு என மாறிவருதல் வழுவமைதியாகக் கொள்க. முன்னை நூல்கட்குத்துணை செய்யும் இக்குறிப்பில் இரண்டு என்று பலவற்றைக் குறிப்பதாயினும் அவ்வாறு கூறாதது தெளித்துணர்தற் பொருட்டு."

நூற்பாவிலுள்ள செம்மை உரையில் போற்றப்பட வில்லை என்பதை இவ்வுரைப் பகுதியால் கண்டு கொள்க. (தடிப்பெழுத்துப் பகுதி).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/483&oldid=1474845" இலிருந்து மீள்விக்கப்பட்டது