பக்கம்:இலக்கண வரலாறு.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

439


“திருமணச் செய்தியில் நங்கையை நம்பிக்குத்
தருவதாய்க் கூறலே தமிழ்மர பாகும்” (337)

நூற்பாச்செய்தி ‘நம்பிக்குத் தருவது’; உரையில் மணமகனுக்குக் கொடுவினை' யாகிவிடுதல் அத்தகையதே. கொடைவினையாதல் மரபு.

நூலும் உரையும் உவமை நயமும் எதுகை மோனை நடை நயமும் கொண்டு விளங்குவதும் புதிய புதிய எடுத்துக் காட்டுகளுடன் மிளிர்வதும் இன்பம் செய்வன.

“வளிப்புக உப்பும் உறையென வரியோ
டொலிப்பட உருப்பெறும்”

வரிவடிவு ஒலி வடிவாதலை உவமைப் படுத்துகிறார். “தமிழ் எழுத்துக்கள் தொய்வைத் தலையணை, மிதிவண்டி உட்குழல் போன்ற உறைகள் காற்றூட்டப்பட்டுச் செயற்காதல் போல வரிவடிவங்கள் குறிவடிவங்களாக ஒலித்துரைக்கப்பட்டு இயலும்” என்கிறார்.

நொடியளவுக்கு, ‘மணிப்பொறியின் நொடி ஓரளபு’ என்பது இந்நாள் வளம். அவ்வாறே ஒரு மாத்திரை இரு மாத்திரையுடைய உயிர்க் குறில் நெடில் எழுத்துகள் அரை மாத்திரையுடைய மெய்யின் மேல் ஏறியும் 1½, 2½ மாத்திரை ஆகாமையைச் சூலுற்ற மகளிரை ஒருமகளாய் எண்ணுதற்கு ஒப்பிட்டுக் காட்டுதல் புதுப்பார்வை. இவ்விடத்தே முந்தையோர் குறித்த ‘அப்பொடு புணர்ந்த உப்பே போலும்’ என்பதையும் சுட்டுகிறார்.

தனித்தமிழ் உணர்வாளர்—சிறந்த திறனாய்வாளர்— பற்பலரைப் பற்பல வகையான் பயிற்றக வழியே ஊக்கி உயர்த்தித் தமிழ் புரப்பவர் என்னும் செயன்மையர் வடித்த நூல் ஈதென்னும் பெருமை இதற்குண்டு. அடுத்து வருவதும் இவர் யாத்த யாப்பு நூலே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/484&oldid=1474863" இலிருந்து மீள்விக்கப்பட்டது