பக்கம்:இலக்கண வரலாறு.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48. திருக்கோவைக் கிளவிக் கொத்து


திருக்கோவையார் 400 துறைகளையுடையது. அத்துறைகளைப் பற்றி அடைவு செய்து கூறும் நூற்பா கிளவிக் கொத்து என வழங்குகின்றது. கோவை நூலை 25 பகுதிகளாக்கி முதல் நூற்பா கூறுகின்றது.

“இயற்கை பாங்கள் இடந்தலை மதியுடன்...
இவையென மொழிப”

என்பது நூற்பகுதியடைவு.

இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், இடந்தலைப்பாடு, மதியுடம் படுத்தல் என்னும் பகுதிகள் இருபத்தைந்தையும் அந்நூற்பா முறையே கூறுகின்றது.

பின்னர் இயற்கைப் புணர்ச்சியாம் முதற்பகுதி,

“காட்சி ஐயம் தெளிதல் நயப்பே
உட்கோள் தெய்வம் துணிதல்கைக் கிளையொடு”

எனவிரித்து பதினெட்டுக் கிளவிகளை அல்லது துறைகளைக் கொண்டுளது. இவ்வாறே பகுதிகள் இருபத்தையும், இவற்றின் கிளவிகளையும் தனியே பெயர்த்தெழுதின் அகப்பொருள் நூல் ஒன்று அமைதல் தெளிவாகும்.

நானூறு துறைகளைக் கொண்ட கோவையே பழமையானது. பின்னே வந்தவை மேலே விரித்துக் கொண்டன. ஆதலால் கோவை முறைக்கு இலக்கணமாகச் சொல்லத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/487&oldid=1475047" இலிருந்து மீள்விக்கப்பட்டது