பக்கம்:இலக்கியக் கலை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் வாழ்க்கையும் 87 கவிதையை வாழ்க்கையின் போன்மைப் (imitation) படைப் பாக்வே, பிளேட்டோ கருதினார். இதனால், கவிஞர்களை அவர். கண்டிக்க் நேர்ந்தது. கவிண்தன்யயும், கவிஞர்களையும். அவர் வெறுப்பதற்கும், கண்டிப்பதற்கும் உரிய காரணங்கள், அறிவுக்கலை யின் வரலாற்றில் அமைந்து கிடக்கின்றன. அவருடைய போன்மைக் கொள்கையை, முதலில் புரிந்து கொள்ள முயலுவோம். கலை, என்பது மூலப்பொருளுக்குப் படி எடுக்கும் ஒருமாய வித்தை எந்த ஒரு பொருளையும் படி எடுப்பதாக அமைவதே கலை. படி எடுப்பதைச் சொற்களின் மூலமும் செய்யலாம், வண்ணத்தின் மூலமும் அமைக்கலாம். முறையில்தான் வேறுபாடே ஒழிய, மூலத்தில் மாறுபாடு கிடையாது. மூலத்தின் மட்டமான படியே, போன்மை வடிவக்கலையாக அமைகிறது” என்பது கலை யைப் பற்றிய பிளேட்டோவின் கருத்தாகும். இதற்கு மேல், கவிதைத் கலையைப் பற்றிய விளக்கத்தைக் காண்போம். கவிதை கவிதையே அறிவு மேன்மைக்கு அடாத ஓர் ஈடுபாடு. நாம் ஒரு பொருளைப் பார்க்கிறோம். அந்தப் பொருளின் கவர்ச்சியான தோற்றம் நமது மனத்தைச் சுண்டி இழுக்கிறது. கவர்ச்சியின் காரணமாக, அதை மிக்க ஈடுபாட்டோடும் உற்று நோக்குகிறோம். இவ்வாறு நேர்க்கும்பொழுது, நமது மனத் தில் ஒரு பாவனை உருவாகிறது. அப்படி உருவாகும் பாவனைத்திறனால் படி எடுக்கும் பணி செயல்படுகிறது. இதன் விள்ைவாகப் போன்ம்ைப் பட்ைப்பு ஒன்று வெளிப் படுகிறது. அந்தப் போன்மைப் படைப்பு கல்லிலும், சொல்வி லும்திரைச்சீலையிலும் வடிவெடுக்கலாம் என்று குறிப்பாகக் கவிதையும் ஒரு போன்மைப்படைப்பே' இத ற்கு.மேல், கவிதை வாழ்க்கையின் உண்மைத் தோற்றத் தைப் பிரதிபலிக்கவில்லை என்பதைப் பவவாறாகப் பிளேட்டோ புலப்படுத்தியுள்ளார். • * : - "ஒரே பொருள் ப்லவ்கையான தோற்றத்தை தரும். அருகில் நின்று பார்த்தால் ஒருவகையாகக் காட்சிதரும்; தொலைவில் சென்று நோக்கினால் வேறொருவகையாக அது தோன்றும்: அதையே நீரினுள் வைத்து, மேலிருந்து காணும்பொழுது. பிறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/106&oldid=750910" இலிருந்து மீள்விக்கப்பட்டது