பக்கம்:இலக்கியக் கலை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. Í 26 இலக்கியக் 566ు என்பது கலையியலார் கருத்தாகும். இக்காரணத் தினாலேயே, கலையியலார் இலக்கியத்தின் வடிவத்திற்கே’ பேரளவிற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றர். இந்தக் கொள்கை, இலக்கியத்திற்கு மட்டும் அல்லாமல் பல்வேறு முருகியற் கலைகளுக்கும் உரியதாகப் போற்றப்படுகிறது. ம்ேற்கு நாடுகளில், வடிவ அமைப்பியல் (Formalism) எண்ணப் போக்கினரும், கலை கலைக்காகவே எனும் கருத்து உடையவரும், கடந்த நூற்றாண்டுமுதல், பேரியக்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். ஒரு கலைப் படைப்பிற்கு அழகு அளிப்பன முன்மைத்திறம் (originality), இயற்கையுணர்வு மரபு (Tradition) guyol's nilபுத்தாக்கம் என்பன. அடுத்து பயன்மதிப்பு, கவர்ச்சி. ஆர்வம் பல்வகைக் கோலத்திலும், ஒருமையுணர்வு வெளிப்படுதல் முற்றொருமை காட்டும் சமன்பாடு, இசை விளக்கம் ೯rgT ஒரு: கலைப் படைப்பினைச் சிறப்புறச் செய்யும் பண்புகளாகும்.' ஒரு கலைப் படைப்பை அனுபவிக்கும் பொழுது ஐந்து பொறி களின் செயற்பாட்டையும் கண்களே செய்யும் நிலையில், ஒருவன் பெறும் இன்ப எக்களிப்பான அனுபவமே, அழகு எனப் போற்றப் படுகிறது. இதனால், அனுபவிக்கப்படும் பொருளில் அழகு இல்லை; அனுபவ நிலையிலே வெளிப்படுவதே அழகுணர்வு என்பது புலனா கிறது. காணுபவருடைய கருத்தில் அ ைம ந் து இருப்பதே அழகு என்பதை அனைவரும் உடன்படுகின்றனர். இவ்வாறாயின், அழகு பொருளில் இருந்து வேறுபட்டதா?’ எனும் எண்ணம் எழலாம். இதற்கு, அப்பொருளில் அமைந்து கிடக்கும் உள்ளார்ந்த பண்பாகவே அழகு அமைந்து இருக்கிறது என்பர். எல்லாருடைய கண்களுக்கும், அது எளிதில் புலனாகாது. காணவல்லார்க்கே அதனைக்காண இயலும் என்பது கலையியலார் கருத்தாகும். அழகு என்பது பாவனை முயற்சியால் பெறும் அதுபவமே என்பதனைப் பலவாறாகக் கலையுலகம் விளக்குவதற்கு முயலு கிறது. இந்தப் பாவனை வெறி மூண்டுவிட்டால், கலைஞன் போக்கே-இயல்பே தனிமைத் தன்மை உடையதாக மாறிவிடும் பாவனை முதிர, முதி , பாவனை நிலையில் இருந்து, அவன் பார்வை நிலைக்கு மாறிவிடுகிறான்; பிறகு சுவைக்கும் நிலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/144&oldid=750952" இலிருந்து மீள்விக்கப்பட்டது