பக்கம்:இலக்கியக் கலை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் ஆட்சிச் சிறப்பு 193 நிரற்றுப்போன குழி ஒன்று புக்கத்தில் இருப்பதை அறியாத அக் களிறு அதனுள்.வீழ்ந்து விடுகிறது. களிற்றின் துன்பத்தைப் போக்கு தற்காகப் பெண்யானை பக்கத்திலுள்ள மரக்கிளையை ஒடிப்பதால் உண்டான ஒனசகேட்டு ஊரில் உள்ளார் அனைவரும் யானை குழியில் வீழ்ந்ததை அறியும்படி ஆகிறது." பாடல் மேலே செல்லினும் நமக்கு வேண்டப்படும் அளவுடன் நிறுத்திக்கொள் கிறோம். இக்கருத்தைக் கவிஞன் நடையில் காண்போம் : ஈயல் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த குறும்பி வல்சிப் பெருங்கை ஏற்றை தூங்குதோல் துதிய வள்ளுகிர் கதுவலின் பாம்புமதன் அழியும் பானாள் கங்குலும் அரிய அல்லமன் இகுளை! பெரிய கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை பலவமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் கழைகரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு வாழை ஒங்கிய தாழ்கண் அசும்பில் படுகடுங்களிற்றின் வருத்தம் சொலிய பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் - விண்தோய் விடரகத்து இயம்பும் அவர்நாடு, (அகநானூறு-8) |குறும்பி வல்சி - புற்றாஞ் சோறு, பெருங்கை ஏற்றை நீண்ட கைகளையுடைய கரடி பேழ்வாய் ஏற்றை புலி, பலாவுமல் அடுக்கம் - பலாத்தோட்டம் நிறைந்த மலையடி வாரம்; கழை நரல்.சிலம்பு மூங்கில் ஒலிக்கும் மலை, வழை . சுரபுன்னை மரம், அசும்பு - பள்ளம், சொலிய போக்க பொருள் செய்வது கடினமாக இருப்பினும், அம்முயற்சி பயனுடையதாகும். தலைவன் நாட்டை வருணித்துக் கூற எத்தனையோ முறைகள் உண்டு. ஆனாலும் கவிஞன் வழியே வேறு. அவன் வருணனை மட்டும் கூறியதாகக் காணப்படவேண்டும். ஆனால் பொருள் அளவில் அவன் மனத்தில் கொண்ட கருத்தை அது வெளிப்படுத்தவேண்டும். இதுசங்ககாலப் பாடல் என்பதும் உயர்வு நவிற்சி அணியென்பது தமிழில் தலைகாட்டாத காலம் என்பதும் நினைவில் இருத்த வேண்டியவை. சாதாரணமாக மலை @.一18. * - - 8 * : *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/212&oldid=751027" இலிருந்து மீள்விக்கப்பட்டது