பக்கம்:இலக்கியக் கலை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் ஆட்சிச் சிறப்பு 201 செயிர் இலா உலகினில் சென்று கின்று வாழ் உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான். (அரசியற்படலம்-10) ஜனநாயகக் கொள்கை முகிழ்க்கத் தொடங்கிவிட்டது. ஆட்டு மந்தை என்று உலகை அரசர் எண்ணிய நாட்கள் கழிந்துவிட்டன. உயிரின் விருப்பப்படி உடல் நடக்கவேண்டுமே தவிர உடலின் கட்டளைகள் உயிருக்கு ஏற்படுவதில்லையன்றோ? இங்ங்ணம் ஒரு சொல்லை இடம் மிாற்றி அமைப்பதால் விளையும் சிறந்த பயனை நாம் கவிதை ஒன்றிலேயே காண இயலும். அதனைக் கூற கவிஞன் கையாளுகிற வழியே தனியானது. அரசனை உயிரென்றும். மக்களை உடல் என்றும் கூறும் பழைய முறையில் அரசன் ஆணை இடுபவனாக ஆகிறான்; குடிகள் அதனை ஏற்று நடப்பதையன்றி வேறு உரிமை அற்றவர்கள் ஆகிறார்கள். உயிர், உடல் என்று' கூறப்பெற்ற சொற்களை மாற்றிவிட்டமையின் கம்பன் செய்த புரட்சி அறிந்து மகிழ்தற்குரியது. தசரதன் வெறும் உடம்பாக மாற்றப்பட்டான். அவனுக்கு ஆணையிடும் உயிர்ாகக் குடிகள் ஆய்விட்டனர். எனவே குடிகளின் விருப்பத்தினால் மட்டுமே அவன் அரசனாக இருக்கிறான் என்ற கருத்து இங்குக் கிடைக்கிறது. "உறைவதோர் உடம்பு என்றமையின் இப் பொருள் கிடைக்கிறது. வேண்டும் வரையும் இருக்கின்றவர்களை உறைகிறார் என்று சொல்லுவோம். மக்கள் விருப்பத்தின் வண்ண்ம் அரசன் ஆளும் அரச்ே இவண் பேசப்பெறுகிறது. இங்ங்னம் ஏற்ற சொல்லை ஏற்ற இடத்தில் பயன்படுத்தி இனியதொரு பொருளைப் பெறவைப்பதை மேல் நாட்டார். 19சொல்லாட்சிச் சிறப்பு என்று கூறுவர். சொல்லோவியத்தால் பொருட் சிறப்புச் செய்யும் இம்முறை தவிர ஒலியாலும் ஒசையாலும் கவிதைக்குப் பொருட் சிறப்புச் செய்யும் முன்ற்யும்

1 o தொல். பொருள்: 85. புறம் : 186. - - - - Éogami Giorgs 4:8. 7. Convention, 78. Revolt. . . Constitutional Monarchy, 10. Poetic Diction.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/220&oldid=751036" இலிருந்து மீள்விக்கப்பட்டது