பக்கம்:இலக்கியக் கலை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒசைச் சிறப்பு - 205 வெவ்வேறான அறுபது வகை ஓசை நயமுடைய கவிதைகளைப் பாடுகிறான். அசை, சீர்களளவில் இவை யாவும் கலிவிருத்தம் என்றே கூறப்படினும் ஒசையால் வேறுபட்டவை. ઉછકપણે பொருளும் ஓசை எதனை அறிவிக்கிறது? ஒசையே பொருளை அறிவிக்கிறது. பொருள் என்றவுடன் சொற்களின் பொருளை நினைந்துகொண்டு அதனை எவ்வாறு ஒசை அறிவிக்க முடியும் என்று இடர்ப்படலாகாது. இங்கே பொருள் என்பது உணர்ச்சியாகிய அநுபவத்தையே குறிக்கிறது. பாடலின் தொழில், அநுபவத்தை உண்டாக்குதலேயாம் என்று முன்னர்க் கண்டோம். பொருள் என்று கூறப்படும் கருத்தை மட்டும் அறிவிப்பது கவிதையின் கருத்தானால் அத்தொழிலைச் செய்யக் கவிதை தேவை இல்லை. உரைநடையே அதனைச் செய்துவிடும். ஆனால் உரைநடையால் கூறப்படும் கருத்தை நாம் அறிகிறோமே தவிர அநுபவிப்பதில்லை. அநுபவம் உணர்ச்சி வயப்பட்டது. உணர்ச்சியை உரைநடை பெரும்பாலும் தூண்டுவதில்லை. ஆனால் கவிதையோ உணர்ச்சியே வடிவானது. கவிஞன் மனத்துள் தோன்றிய உணர்ச்சி அப்படியே நமக்குக் கவிதையாக வருகிறது. எனவே அவனது உணர்ச்சியை நமக்குக் கவிதை அளிக்கிறது என்றால் கவிதையின் எவ்வுறுப்பு அளிக்கிறது என்று கேட்கப்படலாமன்றோ? அங்கே ஒசையும் ஒலிக்குறிப்புமே அதனைச் செய்கின்றன என்று கூறிவிடல்ாம். இவ்வாறு கூறுவதால் கவிதையிலுள்ள சொற்கள் ஒன்றும் சொல்லவில்லை என்பது கருத்தன்று. ஆனால் சொற்கள் செய்ய இயலாத சிலவற்றை ஒசை செய்கிறதென்பதே கருத்தாம். இவ்வோசை ஏனைய உரைநடை ஓசையினின்று மாறுபடுகிற இடம் அறியற்பாலது. கவிதையில் உண்டாம் ஒசை தொடர்ந்து வருவது. உரைநடைபோல் விட்டு விட்டுத் தோன்றுவதன்று. பொருளும், சொற்பொருளும் படித்துச் செல்லும்பொழுதே நமது மனத்தில் பதிகிறது. ஒவ்வொரு வாக்கியத்தையும் உரைநடையில் படித்து முடித்தவுடன் அதனை அறிவதுபோல கவிதையில் உணருவதில்லை. கவிதையில் ஒவ்வொரு தொடரின் பொருளும் மனத்தில் பதிந்து அடுத்த தொடருக்கு எடுத்துச் சொல்லப் படுகிறது.இறுதியாகக் கவிதை முழுவதையும் கண்டபிறகு ஒரு பிண்டப்பொருள்,மனத்துள் காட்சி அளிக்கிறது. கவிதையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/224&oldid=751040" இலிருந்து மீள்விக்கப்பட்டது