பக்கம்:இலக்கியக் கலை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

id இலக்கியக் கலை "மொழியை வாயிலாகக்கொண்டு படைக்கப்பெறும் கலை பல்வகை வடிவங்களை உடையது. அது பாட்டு வடிவமாகவும், உரைநடை வடிவமாகவும் இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட பாவகையால் மட்டும் இயற்றப்பட்ட தாகவும் இருக்கலாம். அல்லது பல்வேறு பாவகைகளால் அமைந்ததாகவும் இருக்கலாம். இவ்வாறு மொழியை வாயிலாகக் கொண்டு, பலவகை வடிவங்களில் வழங்கி வரும் கலைக்குப் பொதுவான பெயர் எதுவும் இதுவரை ஏற்படவில்லை.” எனும் வாசகத்தில் சுட்டப்படும் பொதுவான பெயர் யாது? நாம் அறிந்த இலக்கியம்' எனும் பெயரே அது. இதனால், அரிஸ்டர்ட்டிலின் காலத்தில் கிரேக்க மொழியில், பல்வேறு வகையான படைப்புகளை - சொற்களாலான படைப்புகளைச் சுட்டுவதற்குக் கிரேக்க மொழியில் பொதுவான ஒரு சொல் இல்லை எனும் குறைபாட்டை அவர் உணர்ந்துள்ளமை புலனாகிறது. பண்டை உலகமே அறியாத பெயர் பண்டை ரோமானியப் பேரரசின் காலத்தில் சிறப்புற்ற இலக்கியச்சுவைஞன் ஹார ஸ் (Horace) பு க ழ் பூத்த கவிஞனுமாவான். அவனுடைய கவிதைக்கலையில் (Ans Poetica) இலக்கியம் எனும் பொதுப்பெயர் இடம் பெறவில்லை, ஆனால், அந்நூலுள் இலக்கியத்தின் பல்வேறு வகைகள் ஆர்ாயப் பட்டுள்ளன. ஏறக்குறைய இதே நிலைதான் ஐரோப்பர் முழுவதிலும் பதினேழாம் நூ. ஆ. முடியும் வரையில் நிலவியது. இங்கிலாந்தில் பதினேழாம் நூற்றாண்டில் சிறப்புற்று விளங்கியவர் நாடகப்பேராசிரியர் ஷேக்ஸ்பியர் (Shakespeare) அவருக்கு விட்ரேச்சர் (Literature) எனும் சொல் தெரியாது. அவர் பயன்படுத்தியுள்ள ஆங்கிலச்சொற்கள் இருபதினாயிரம் என்பர். ஆனால், அவற்றுள் இலக்கியத்தைச் சுட்டுவதற்குரிய லிட்ரேச்சர் எனும் சொல் காணப்பெறவில்லை. எழுதப்படிக்கத் தெரிந்தவன் எனும் பொருளில் வழங்கும் விட்ரேட்டர் (Litterateur) எனும் சொல்லை மட்டும் அவர் பயன்படுத்தி யுள்ளார்: - - - - y - ‘. . . . . - இதனால், அவருடைய காலத்தில் இலக்கியப்படைப்புகளைக் கவிதை' எனும் பொருள்தரும் பொயகி (Poesy) எனும் சொல்லாலும், செய்யப்பட்டது எனும் பொருள் தரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/26&oldid=751079" இலிருந்து மீள்விக்கப்பட்டது