பக்கம்:இலக்கியக் கலை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 21 உவமைத்தொகை - கவிதை, சிறக்கக் காரணமானவற்றுள் ஒன்றாகிய, உவமையை முன்னர்க் கண்டோம். உவமை என்பது எல்லா மனிதர்களும் அறிந்து உணரக் கூடியது. அதனால்தான் யாவரும் உவமையைக் கையாள்கிறோம். கவிதையில்: மட்டுமன்றி உரைநடையிலும், பேச்சிலுங்கூட உவமைகளை ஆளுகிறோம். இதற்கு இரு காரணங்கள் உண்டு. உரை. நடிைழையும், உரையாடலையும் பொறுத்த மட்டில், ! சொல்லுவோன் கருத்தைக் கேட்போன் நன்கு அறிந்து கொள்ளவே உவமை, பயன்படுகிறது. இரண்டாவதாக, அழகின் பொருட்டாகவும் இது சில சமயங்களில் பயன்படுத்தப்படு கிறது. ஆனால் உவமை முதன் முதலில் தோன்றிய காரணம் அறிந்தவற்றைக் கொண்டு அறியாதவற்றை விளக்குவதேயாம். புலி, பூனையைப்போல் இருக்கும் என்றால் அறிந்த பூனையைக் கொண்டு அறியாத புலியைக் கேட்போனுக்கு விளக்குவதே பயனாகும். ஆனால் இந்தக் கருத்தோடு தோன்றிய உவமை அம்மட்டில் நிற்கவில்லை. நாளட்ைவில் விளக்கம் தருதல் என்ற ஒரு காரணத்திற்காக மட்டு மல்லர்டிலும் உவமை. தோன்ற ஆரம்பித்தது. அந்நிலை யிலேயே கவிஞன் உவமையை ஆள ஆரம்பித்தான். உவமை நன்கு பயன்படுத்தப்பட்ட பிறகு, உவமையில் குறுக்கம் தோன்றலாயிற்று. இக் குறுக்கத்தையே இலக்கணம் உவமைத் தொகை என்று கூறிற்று. - கவிதை என்பதே சுருங்கிய முறையில் விளக்கம் தருவது. எனவே உவமையும் சுருங்கலாயிற்று, அங்ங்னம் சுருங்கிய உவமையே பிறகு உருவகம் ஆயிற்று. ஒரு காலத்தில் தமிழிலக்கியத்தில் இவ்விரண்டிற்கும் ப்ெரிய் வேறுப் ட்டைக் கண்டிலர். அதனாலேயே தொல்காப்பியனார் உருவக்ம் எனத் தனியே ஒன்றையும் கூறவில்லிை உவமையைப் பல காலும் பயன்படுத்திய ஆபின்னரே ia டிவமைத்தொகை தோன்றியிருக்க வேண்டும். போல, புரைய முதலிய உவமம் உருபுகள் வெளிப்படையாகக் காணப்பட்ட பொழுது உவமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/271&oldid=751092" இலிருந்து மீள்விக்கப்பட்டது