பக்கம்:இலக்கியக் கலை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் : 2 இலக்கியம் : ஒரு வரையறை (மேல்நாட்டவரின் சிந்தனை) "இலக்கியம் எப்படி இருக்கும்? என்பதை விளக்கிக் கூறுவது எளிது. ஆனால் இப்படித்தான் இருக்கும் என வரையறுத்துக் கூறுவது அரிய செயலாகவே இருந்து வருவதை முன்னர்க் கண்டோம். ஆயினும், சிந்தனை உலகம் 'சும்மா இருத்தலே சுகம்’ என இருந்துவிடுவதில்லை. அறிவு வேட்கையும் உண்மை காண வேண்டும் எனும் நாட்டமும், புதுமையை அறியவேண்டும் என்பதனால் உண்டாகும் உள்ளத்துடிப்பும் சேர்ந்து, யாதாகிலும் ஒருவகையில் ஒரு கருத்தினை விளக்க மனிதனைத் தூண்டிவிடு கின்றன. ... " - பழங்கதையாய்ப் போன விளக்கங்கள் இந்த உந்துதல் சக்தியால், இலக்கியத்தைப் பற்றிப் பல் வேறு வகையான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. "வாழ்க்கையினைப் பிரதிபலிக்கும் கண்ணாடி வாழ்க்கையின் விமரிசனம்', 'இயற்கை அழகைப் படம் பிடித்துக்காட்டும் அல்லது படியெடுத்துத்தரும் மொழியாலாகிய படைப்பு’, ‘வாழ்க்கையின் அனுபவக் கருவூலம்’ 'மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு' எனப் பலவாறாக இலக்கியத்திற்கு அறிஞர் பலர் விளக்கம் தந்துள்ளனர். ஆனால் இவையாவும், இலக்கியத்தை நடுநிலையில்நின்று விளக்கவில்லை; அவரவர்களுடைய மனப்பதிவு (Impressionistic) அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள விளக்கங்களாகும். இவ் விளக்கங்கள் யாவற்றையும் ஒன்றாகத் தொகுத்து நோக்கினால், கிடைக்கும் "புனையா ஒவியமே இலக்கியம் பற்றி நமக்குக் கிடைக்கும் ஒரு வரைபடமாகும். பன்னெடுங்காலமாக இலக்கியத்திற்குத் தரப்பட்டுள்ள விளக்கங்கள் நம் தேவையை நிறைவுசெய்வனவாக அமையவில்லை. எனினும் நம்மால் இயன்றவகையில் எல்லாம், விளக்கமுயலுவதே நம் கடமையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/29&oldid=751112" இலிருந்து மீள்விக்கப்பட்டது