பக்கம்:இலக்கியக் கலை.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 \ இலக்கியக் கலை புண் பட் டு க் கண்ணுக்குக் கு ரூ ர ம | ண காட்சி நல்குகிறான். ஆனால் அவன் புகழ் செவிக்கு இனிதாகவே உளது. அவன் பகைவர் அவன் பெயரைக் கே. ட் டவு ட ன் புறமுதுகிட்டு ஒடிவிடுதலின், எவ்வித உடலூறும் இன்றி நல்ல அழகுடன் விளங்குகின்றனர். ஆனால் அ வ ர் க ளு ைட ய கோழைத்தனம், கேட்பவர் காதைப் புளிக்கச்செய்கிறது. இவற்கிந்தி கூறியகவிஞன் ஒர் அழகு படப்பின்னர் ஒரு கற்பனை ன் தீவிரி இருவரும் ஆளுக்கு ஒரு பெருமையை (கிள்ளிக்குப் புகழும், அவன் பகைவருக்கு அழகும்) உடையவராக இருக்கவும் உலகம் உன்னையே புகழ்வதன் காரணம் என்ன?” என்று வினவுகிறான். கிளத்தற் பாடற் சிறப்பு : இவ்வகைப் பாடல்கள் உள்ளதை உள்ளவாறே கூறும் இயல்பினவாயினும் கவிதையழகு பொருந்தவே கூறும். இதே பொருளை உரைநடையிலும் கூ றலாம். இரண்டிற்கும் வேற்றுமை பெரிதும் இல்லை. தன் காலத்தில் வாழ்ந்த மனனன் ஒருவன் செய்த அருஞ்செயல்களைக் கவிஞன் ஒருவன் காண்கிறான். அதனில் ஈடுபட்டு அப்படியே பாடிவிடுகிறான். நாம் பலரிடத்தும் காணக்கூடிய இச்செயலை ஒருவனிடத்துவைத்து அழகுபெறக் கூறிவிடுகிறான். பல ச மயங்க ளி ல் ஒவ்வொருவனுடைய வரலாற்றில் ஒரு பகுதியுங் கூட இவ்வகைக் கவிதைகளில் புனையப்படுவதுண்டு. மேலே கூறிய கவிதையில் முற்பகுதி ஒரு நிகழ்ச்சியை உட்கொண்டது ஆயினும் பிற்பகுதி சிறந்த கவிதைக்குரிய முறையில் அழகான ஒரு கற்பனையைச் செய்கிறது. சாதாரணப் பொருள்களையுங்கூடக் கவிதை என்ற மந்திரக் கோலால், தொட்டுக் கவிஞன் என்றும் நிலைபெற்றுநிற்கும் கலைப்பொருளாக மாற்றிவிடுகிறான். . . .” இத்தகைய பாடல்களுக்கு உரிய தனிச்சிறப்பு என்னவெனின், இவற்றின் நிலைக்களம், மிக எளியவர்கள் வாழ்க்கை பற்றிய தாகவேகூட இருக்கலாம். பெரும்பாலும் கவிதையை ஆக்கும் கவிஞன் தன் காலத்தில் உள்ளவர்களைப் பற்றியும் நடைபெற்ற செயல்களைப் பற்றியுமே இக்கவிதைகள் தோன்றுகின்றன. சாதாரண வேடன் வாழ்க்கையும், சிறந்த அரசன் வாழ்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/301&oldid=751126" இலிருந்து மீள்விக்கப்பட்டது