பக்கம்:இலக்கியக் கலை.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 இலக்கியக் கல்ை என்றும் வெளி என்றும் பொருள்படும். இப்பகுதிகளைப்பற்றிக் கூறும் இலக்கணத்தைத் தமிழர் பெரிதும் விரும்பியிருந்தனர் என அறிகிறோம். இறையனார் களவியலின் உரையில் சில பகுதிகள் ஆராய்ச்சிக்கு உரியன. பாண்டிய நாட்டில் பஞ்சம் தீர்ந்தபின், ஒடிப்போன புலவர்களையெல்லாம் மீ ட் டு ம் கொணர்ந்து சேர்த்ததனனாம் அரசன். அவருள் எழுத்திலக்கணமும் சொல் விலக்கணமும் வல்லார் இருக்கப் பொருளதிகாரம் வல்லவர் இல்லாமற் போயினராம். உடனே அரசன், "என்னை எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றிலேம்' என வருந்தினனாம், இது ஒரு கட்டுக்கதையாகும், தொல் காப்பியம் இருக்கவும். வேறு நூல் எதற்கு என்று நினைப்போரைச் சமாதானப்படுத்தக் களவியல் உரைகாரர் கட்டிவிட்ட கதை இது என்றே தோற்றுகிறது. கதையேயாயினும் இப்பகுதியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மை ஒன்று உண்டு. தமிழின் பொருளதிகாரத்தை எங்ங்னம் போற்றினான்? தனது மொழியை எவ்வாறு போற்றினான்? இவ்விரு வினாக்களுக்கும் மேற்காட்டிய கதை விடை கூறுகிறது. இலக்கணம் என்பது மொழி சிதையா திருக்க வகுத்த வேலி' என்று நினைக்கும் பிழையைத் தமிழன் செய்யவில்லை. மொழி சிதையாதிருக்க வகுக்கப்பட்ட வழி எழுத்தும் சொல்லும் கூறும் இலக்கணங்களேயாம். ஆனால் பொருளதிகாரம் வாழ்க்கையைப்பற்றிக் கூறும் கருவூலம். ‘எழுத்தும் அவற்றாலாய ச்ொல்லும் ஏன் இருக்கின்றன? என்றால் ம னி த ன் வாழ்வுக்காகவேயாம். அவ்வாறாயின் சொல்லின்றி வாழ்க்கை நடைபெற்ற காலம் இல்லையோ?" என்று கேட்கலாம் உண்டு என்றாலும், அவ் வாழ்க்கை விலங்கு வ்ாழ்க்கையிலும் வேறுபட்டது அன்று. ஆகவே மனிதன் மனிதனாக வாழ முற்பட்ட காலம் முதல், சொல் அவனுடைய வாழ்க்கையில் நன்கு கலந்துவிட்டது. அவனது எண்ணமாக, செயலாக, கருத்தை வெளியிடும் கருவியாகவெல்லாம் சொல் பயன்படத் தொடங்கியது. ஆதலால் இறையனார் உரைகாரர் எழுத்தும் சொல் லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே என்று கூறியது எவ்வளவு பொருத்தமுடையது! சொல்லை மட்டும் ஆராய்ந்து, வாழ்க்கையை ஆயவில்லை என்றால்:அந்த ஆராய்ச்சி முற்றுப்பெற்றதாகாது: தினைப் பிறப்பும் வள்ர்ச்சியும் இவ்வளவு சிறப்புடைய பொருளதிகாரம் வாழ்க்கையை அடுத்து அலசிப், பார்த்து, அது முற்றும் அகம், புறம் என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/305&oldid=751130" இலிருந்து மீள்விக்கப்பட்டது