பக்கம்:இலக்கியக் கலை.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலை, கலைக்காகவே 327 வாழ்வின் நன்மைகளை மிகுதிப்படுத்தல் என்ற இவை எல்லாம் கவிதையின் பயன்களாம்: இவை இல்லாவிடில் கவிதை என்பது பயனற்ற ஒலிக்கூட்டமாகவே நின்றுவிடும்" என்று ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ் என்ற திறனாய்வாளரும். கூறுகிறார். வாழ்க்கை எவ்வாறு அமையவேண்டும்?' என்ற வினாவுக்குத் தரப்படும் புல திறப்பட்ட விடைகளே கவிதைகளில் காணப்படு கின்றன.' . . . . தமிழ்க் கவிதையின் தனிச்சிறப்பு தமிழ் இலக்கியத்தில் உள்ள சிறந்த கவிதைகளில் ஒன்று மதுரைக்காஞ்சி என்பது. "தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்" என்ற பேரரசனை மாங்குடி மருதனார் என்ற பெரும்புலவர் பாடிய பாட்டாகும் அது. தலையாய கவிதைக்கு உரிய இலக்கணம் அனைத்தும் அதனிடம் உண்டு. ஏனைய அழகுகள் ஒருபுறம் இருக்க, மாத்யூ ஆர்னால்ட் கூறிய இயல்பு களுக்கு இக் கவிதை எவ்வளவு ஒத்துவருகிறது என்பதைக் காணலாம். என்றும் அழியா உண்மைப் பொருள்களை உட்கிடக்கையாகக் கொண்டே இக் கவிதை தோன்றியது. வெறும் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கூறும் நூல்களும் தமிழ் மொழியில் உண்டு. அவுையும் செய்யுள் வடிவில் அமைந்திருப்பினும். அவை கவிதை ஆகா. உர்ைந்டை மிகுதியும் பயிலாத காலத்தில் செய்யுளை ஒரு கருவியாகக் கொண்டு அறிவுர்ை வழங்கின்ார்கள். இடைக்காலத்தில் தோன்றிப் பழமொழி, ஆசாரக்கோவை, திரிகடுகம் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை, இவைகளும் வாழ்க்கைக்கு வேண்டியவற்றையே கூறினும், கூறும் முறையில் முற்கூறிய மதுரைக் காஞ்சிக்கும் இவற்றுக்கும் ஆவறுபாடு.நிரம்ப உண்டு. 3 : જ્ય ' 'ડ . . . . . જે.' . . . . . . . . . . ... : }, \ tછે. மதுரைக் காஞ்சி ஆசிரியரும் அரசனுக்குச் சில அறவுரைகள் வழங்குகிறார். நெடுஞ்செழியன் மிக இளமையிலேயே ப்ேர்ரில் ஈடுபட்டுவிட்டான். இளமை முறுக்கினால் போரில் மேலும் மேலும் பெருவிருப்புக் கொண்டவனாகி அதில் ஈடுபட்டான். ஆட்சியின் ஒரு பகுதி போராகும். வென்ற நாட்டில் நல்ல ஆட்சியை நிறுவுவது மற்றப்பகுதி. வாழ்நாள் முழுவதையும் போரில் கழித்துவிடும் ஒருவன் வாழ்க்கையின் பயனை எவ்வாறு பெறுதல் கூடும்? கலைஞராகிய மாங்குடி மருதனார் இதை நன்கு உணருகிறார். தம் அரசனது வாழ்க்கை வீணாவதை உணர்ந்து, அவனைத் திருத்த முற்படும் அவர் இருவழிகளில் அதன்ை மேற் கொள்ளலாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/347&oldid=751176" இலிருந்து மீள்விக்கப்பட்டது