பக்கம்:இலக்கியக் கலை.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 இலக்கியக்கவை ஒன்றாகவே தோன்றுகின்றன. இரண்டும் வெவ்வேறானவை எனினும் பிரிக்க முடியாதபடி அவை ஒன்றாய்க் கலந்துள்ளன. இதனை நன்குணர்ந்த காளிதாசன், 'சொல்லும் பொருளும் போல் உள்ள உமை யொருபர்கனை இறைஞ்சுதும்' என்று பாடினான். இறைவனையும் உமாதேவியையும் சொற்பொருளும் சொல்லும் ஆவர் என்னும் கருத்துப்படப் பரஞ்சோதி முனிவர், - - - - "என்னை இகழ்ந் தனனோசொல் வடிவாய்கின் இடம்பிரியா இமையப் பாவை - தன்னையுஞ்சொல் பொருளான உன்னையுமே இகழ்ந்தனன் என் தனக்குயாது என்னா! என்று கூறுகிறார். இவ்விரண்டு உதாரணங்களாலும் இந் நாட்டவர் சொல்லும் பொருளும் பிரித்துணர இயலாதவை என்ற உண்மைய்ைப் பன்னெடுங்காலம் முன்னரே கண் டிருந்தனர் என்பதை அறியலாம். மேலும் கவிதையில் சுட்டப்படும் பொருளாக உள்ளவனும் மனிதனே ஆவான். ஏனைய நுண்கலைகளோடு х சிறிது வேறுபாடு உடையது கவிதைக்கலை கட்டிடக்கலையில் 'ஒன்றல்' வெளியே உள்ளது, ஒவியத்தில் நிழலும் ஒளியும் சேரும் தன்மையில் ஒன்றல் தன்மை உள்ளது. இசைக்கலையில் மட்டும் ஒன்றலே உயிர்நாடியாக உள்ளது ஈண்டுக் கலைக்குப் பயன்படும் கருவியும் கலையும் வேறல்ல,. கருவியே ᏧᎦ6y ?ü யாகும் இடம் இசையே. இந்தத் தன்மையே கவிதைக்கும் பொருந்தும். மேலும் சிற்பத்தில் பருவுடலின் வடிவம் காட்சியளிக்கிறது. ஒவியத்தில் நிழல் தன்மையுள்ள உருவம் உணர்ச்சியோடு, கலந்து வெளிப்படுகிறது. இசையில் உணர்ச்சியும் வி ரு ப் ப மு. ம் தோன்றுகின்றன. ஆனால் கவிதையில்தான் மனிதன் "முழுத்தன்மையோடு காட்சி யளிக்கிறான். . - - . இயற்கையைப் பற்றியும் கவிதைகள் உளவே; அங்ங்ன மிருக்க கவிதையில் மனிதனே காணப்படுகிறான் என்று கூறல் பொருந்துமா எனக் காண்போம். இயற்கையைப் மாற்றிய கவிதைகளிலும் இயற்கை அவ்வாறே கூறப்படுவ தில்லை. அதிற்கு மறுதலையாக், மனித மனத்தில் இயற்கை 'வனரந்த ஒவியத்திற்கு அவன் எவ்வாறு பிரதிபலிக்கிறான் என்பதே கூறப்ப்டுகிறது. எனவே இயற்கைப்பற்றித் தோன்றும் கவிதைகளிலும் அவன் இயற் கையினிடத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/363&oldid=751194" இலிருந்து மீள்விக்கப்பட்டது