பக்கம்:இலக்கியக் கலை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத் தோற்றம் 27 அடுத்ததாகச் சொல்லப்படுவது மனிதரைப்பற்றிய ஆர்வத் துடிப்பு, மற்ற மனிதர்களைப் பற்றியும், அவர்களுடைய செயல் களைப்பற்றியும் அறிவதற்குரிய ஆர்வமே இத்துடிப்பாகத் தோன்றுகிறது. . . . . "கூடிவாழும் விலங்கான மனிதன் பிறரோடு பழகுகின்ற ப்ொழுது அவர்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள்? எப்படி வாழ்கிறார்கள்? எப்படி உணருகிறார்கள்? எப்படிச் செயல் படுகிறார்கள்?’ என்பன போன்றவற்றை அறியவேண்டும் எனும் ஆர்வ மேலீட்டால் பிறருடைய, சிந்தனை, செயல்முறை, உறவுமுறை முதலியன எவ்வெவ்வாறு அமைகின்றன என்பதை அறியத் துடிக்கிறான். இந்த ஆர்வத்தின் விளைவாகக் கருத்துப் பரிமாற்றமும் கலந்துரையாடலும், பிணக்கும் பூசலும் தோன்றுகின்றன. இவையெல்லாம் தெரிவித்தல்' என்னும் உந்துதல் ச க் தியா ல் இயக்கப்படும்பொழுது, இலக்கியம் பிறக்கிறது. - - நாம் வாழும் நடைமுறை உலகத்தில் நமக்குள்ள ஈடுபாடும், புதியதாகப் படைத்துக் காண விரும்பும் கற்பனைத் திறன், ஊக்குவிக்கும் உந்துதல் சக்தியும், இலக்கியம் இயற்றப்படுவதற்கு ஒரு காரணமாக அமையக்கூடும். அன்றாட உலக வாழ்க்கையில், மனிதன் அல்லற்பட்டு ஆற்றாது, கண்ணிர் வடிக்கும் கொடுமை களைக்கண்டு மன அதிர்ச்சி அடைகிறோம். இத்தகைய கொடுமை களில் இருந்து, மனித இனம் விடுதலை பெறவேண்டும் எனும் அவாவினால் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கிறோம். இதன் விளைவாகப் புதிய சமுதாயத்தைப் பற்றிய - புதிய உலகைப்பற்றிய ஒருவகை அகக்காட்சி நம் உள்ளத்தே புனையா ஒவியமாகத் தோன்றுகிறது. உடனே புதியதோர் உலகு செய்வோம்' என முழக்கமிடுகிறோம். இந்த உணர்ச்சிவெறி இலக்கியப் படைப்பிற்கு ஒர் உந்துதல் சக்தியாக அமைகிறது. திருவள்ளுவருடைய திருக்குறள் இத்தகைய உந்துதலால், தோன்றியதேயாகும், சிறப்பாகத் திருக்குறளில் உள்ள நாடு' எனும் அதிகாரமும் சாத்தனாரின் 'அமுதசுரபியும், கம்பன்க்ண்ட கோசலமும் இத்தகைய துடிப்பினால் எழுந்தவையே. பிற்காலப் புராணங்களில் காணப்பெறும் நாட்டுப்படலம், நகரப்படலம் போன்றவையும் இத்தகைய உந்துதலினாலேயே உருவாக்கப் பெற்றுள்ளன,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/43&oldid=751257" இலிருந்து மீள்விக்கப்பட்டது