பக்கம்:இலக்கியக் கலை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 இலக்கியக் கலை குறிப்பிட்ட ஒரு பொருளின்வடிவ அமைதியால் ஈர்க்கப்பட்டு, அதன் வடிவ அழகிற்காக, நாம் அதை விரும்புமாறு தூண்டும் ஒர் அகத்தெழுச்சியைப் பெறுகிறோம். அழகான ஒரு பொருளைக் காண்பதனாலும், ஐம்பொறிகளுள் யாதாகிலும் ஒன்றினாலேர் சிலவற்றினாலோ அதைச் சுவைப்பதனாலும் ஒருவகை இன்ப வுணர்வு நம் உள்ளத்த்ே எக்களித்து எழுகிறது. இவ்வாறு, ஒருவர் பெறக்கூடிய இன்பத்தையே முருகியல் இன்பம் அல்லது ‘அழகியல் இன்பம் என நாம் போற்றுகிறோம். இந்த இன்ப அனுபவப் பாதிப்பைப் புலப்படுத்தும் வகையில், யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ எனும் நோக்கில், இலக்கியம் படைப்பதற்குரிய ஆர்வம் ஒரு கலைப்படைப்பாக வெளிப்படுகிறது. இவ்வாறு அழகுணர்ச்சியின் கவர்ச்சியால் உந்தப்படுகிற பொழுது இலக்கியம் படைக்கப்படுவதையும் காணுகின்றோம். . . . . . 'இவ்வியலின் முதலில் நாம் கண்ட இலக்கியம் தோன்று வதற்குரிய ஆறுவகைத் துடிப்புகளையும் நான்குவகையர்கத் தொகுத்துக் கூறும் திறனாய்வாளர்களின் எண்ணப்போக்கையும் கண்டோம். இத்துடிப்புகள், ஒவ்வொரு படைப்பாளனுடைய அனுபவத்திற்கும், ஆளுமைக்கும் ஏற்ப இணைந்தும் இழைந்தும், அல்லது பின்னந்தும் விரிந்தும் இயங்குகின்ற பொழுது, சிறப்புமிகு இலக்கியப் படைப்புகள் வெளிப்படுகின்றன. இவற் ற்ால் இலக்கியத் தோற்றத்திற்குப் பல்வேறு வகையான உணர்ச்சித்துடிப்புகள் மூலகாரணமாக அமைகின்றன எனும் உண்மை தெளிவாகிறது. - 1. The great Dialogues of plato. p. 142. 2.கந்தபுராணம், கடவுள் வாழ்த்து. 8. C. M. Bowra inspiration and poetry, pp. 8-15. 4. J. G. Freud, Psycho. Analysis of Sex, Collected works - wol, 2, pp. 12-1" 5. புறநா. 242, - - 6. Rene wellek, concepts of criticism, pp. 5-22.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/44&oldid=751258" இலிருந்து மீள்விக்கப்பட்டது