பக்கம்:இலக்கியக் கலை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• * இலக்கியத்தின் இயல்புகள் - 35 பொங்கிவரும் பெருநிலவாகிய நிறைமதியினையே சுட்டுகிறது. பெளர்ணமி அன்று முழுமதியாக-தருமத்தின் வதனம் போல். வெண்திங்கள்-வெண்ணிலவாகப் பொலிவுறுவது இ ய ற் ைக. 'முழுமதி' என்பதையே தலைவியின் சார்பில் தோழி வெண்ணிலவு' என விளிக்கிறாள். - - இதனோடு அவள் அமையவில்லை. மேலும் நெடு' எனும் அணியைத் தொடுத்து அதனைச் சிறப்பிக்கிறாள். இங்கு நெடுமை’ -நெடுநேரத்தைப் புலப்படுத்துகிறது. முழுமதியமாக ஒளிவீசும் பொழுது, சிலசமயங்களில் மேகங்கள் மறைப்புண்டு, ஒளிவீசுவது குன்றிப்போய்விடுவதும் உண்டு. ஆனால் அன்றைய வெண்மதி, மாசு மறுவற்ற வானில் (கார்த்திகை சித்திரை நிறைமதி நாள்களில் விளங்குவதைப் போல) மறையாமல், தொடர்ந்து பட்டொளி வீசுகிறதாம்! இதனால், தன்னுடைய காதலன் வருகைக்குப் பேரிடர்ப்பாட்டை நெடு வெள்நிலவு தொடர்ந்து உண்டாக்குகிற தாம். இந்த அடியினைத் திரும்பத் திரும்பச் சொல்லுவோ மானால் தலைவியின் பொறுத்தற்கரிய துன்பம், ஏக்கம் ஆதங்கம் ஆகிய அனைத்தும் சுமந்தநிலையில் அவள் ஏமாற்றப் பெருமூச்சு விடுவது, நம் அகக்காதுகளில் ஒலிக்கும். இதிலிருந்து நாம் என்ன அறிகிறோம்? நெடுநேரமாகத் தலைவி வழிமேல் விழிவைத்து. அவன் வருகைக்காகக் காத்துக் கிடக்கிறாள்' என்பது தெளிவாகிறது." ஆனால், நள்ளிரவைப் பகலாக மாற்றும் வெண்ணிலவே அவனுடைய வருகைக்கு இடையூறாக இருப்பதாக அன்பு மயமான உள்ளம் கருதுகிறது. அதனைத் தோழி, எடுத்து உரைக்கிறாள். இத்துணைப் பொருளாழமும் நயமும், நல்லை அல்லை நெடு வெண்ணிலவே! எனும் ஒரடியில் உள்ள நான்கே சொற்களைக் கொண்டு. அப்பாடலைப் படைத்த புலவர் நெடு வெண்ணில வினார் வெளிப்படுத்தியுள்ளமை நவில்தொறும் நூல்நயம் பயப்ப தாகும். அலையலையாக இலக்கிய இன்பத்தை எழுப்புவதாகும்; புலவருக்கே அத்தொடரைப் பெயராக இட்டுள்ளதைக் காண்க! இந்தக் கலையழகு வாய்ந்த இன்ப எக்களிப்பு எதன்itல் படிப்பவர்க்குத் தோன்றுகிறது: - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/51&oldid=751266" இலிருந்து மீள்விக்கப்பட்டது