பக்கம்:இலக்கியக் கலை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இலக்கியக் கலை கொண்டதாகவும், கற்பனை வளமும், கலையழகும் வாய்ந்த தாகவும் உள்ள இலக்கியப் படைப்புகள் என்றும் வாழும் தகு பெற்றுள்ளன. - . குறுகிய உணர்வுகளுக்கும், சிந்தனைக்கும் இடம் தாராமல், அனைத்துலகக் கண்ணோட்டத்தில், பரந்துபட்ட மனித இயல்பு களைச் சித்திரிக்கும் வகையில் அழகு மிகு புதுமைக் கவர்ச்சி பொருந்திய கலை வடிவத்தோடு படைக்கப்படும் நூல்களே பெரிதும், வாழும் இலக்கியங்களாக வான்புகழ் பெற்றுள்ளன. காலம் கடந்து'.எக்காலத்திற்கும் பயன்படுவதாக அமைவது இலக்கியத்தின் பொதுப்பண்புகளுள் முதன்மையான தர்கும். தமிழில் உள்ள சங்கப்பாடல்கள், திருக்குறள், சிலப்பதி காரம், கம்பனின் இராமகிர்தை போன்ற பல்வேறு நூல்கள், என்றும் வாழும் இலக்கியங்களாக உள்ளன; ஒரு கலைப்படைப்பு, அதன் அமைப்பிற்கும் நோக்கிற்கும் தேவையான எல்லாப் பண்புகளையும் முழு ைம ய க ப் பெற்றதாக இருக்க வேண்டும். இதனைத் தன்னிறைவுப் பண்பு என்பர். இலக் கியத்தின் பொதுப்பண்புகளும் தன்னிறைவு என்பது இரண்டாம் இடத்தைப் பெறுகிறது. அத்ாவது வடிவத்தாலும், உள்ளத் தாலும் முழுநிறைவ்ானதாக (Perfection) அமைவது இலக்கியம். ஒர் இலக்கியத்தைப் படிக்கின்றவர் அதில் விட்டகுறை-தொட்ட குறைகள் நிறைய உள்ளன்’ எனும் உணர்வு எழாமல் அதனைப் படித்து முடித்து மனத்தில் ஒருவகை நிறைவு உணர்வினைப் ப்ெறத் தக்கதாகப் பயன்படுவன் யாவும் இலக்கியமாகும். வேறுவகையாகக் கூறுவதானால் இலக்கியத்தின் பாடு பொருள் பரந்துபட்டதாக, மனித இனத்தை முழுமையாகத் தழுவிச் செல்வதாக இருக்கவேண்டும் இதனை உலகப் பொதுமை அல்லது அனைத்துலகப் பண்பு (Universality) எனலாம். இது காலத்தையும் இடத்தையும் கடந்ததாக அமையும், பண்பாகும். இதனைச் சுருக்கமாக பொதுமை’ எனும் ஒரு சொல்லால் பேராசிரியர் ந. சஞ்சீவி சுட்டியுள்ளதை நாம் முன்னரே கண்டோம். அடிப்படை உணர்ச்சிகளையும், அனைவருக்கும் உண்டாகக்கூடிய உள்ளக் கிளர்ச்சிகளையுமே முதன்ழைப்படுத்திக் காட்டும் இலக்கியங்களே சாவா-மூவா இலக்கியங்களாகப் பெருவாழ்வு பெற்றுள்ளன, • , . . . . , ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/54&oldid=751269" இலிருந்து மீள்விக்கப்பட்டது