பக்கம்:இலக்கியக் கலை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இலக்கியக் கலை போன்ற க்ல்ைவிளக்க (Treatise and studies) gitsūsamar @g, தலைப்பின் கீழ்த் தொகுத்துக் கூறலாம். } - இலக்கியத்தைப் படைப்பதற்குரிய தலையூற்றாக விளங்கும் அனுபவத்தால் உண்டாகும். அகத்தெழுச்சி, பல்வேறுவகைப் பட்ட படைப்பு இலக்கியங்களாக வெளிப்பட்டுள்ளன. அவற்றைத் தொகைவகைப்படுத்தி ஆராயும் பொழுது, அவற்றில் பொதிந் துள்ள உள்ளார்ந்த இயல்புகள் புலனாகின்றன். இந்த இயல்பு களைப் பொதுமைப்படுத்தும் வகையில் இந்த இலக்கியப் பாகுபாடு ச்ெய்யப்படுகிறது. வடிவ அமைதிப் பாகுபாடு நெடுங்காலம் இலக்கியத்தின் வடிவம், செய்யுளாகவே இருந்துவந்தது. எனினும், உணர்ச்சித் துடிப்பையும், கருத்து ஒட்டத்தையும் ஒசைநயத்தேர்டு புலப்படுத்துவதற்காகப் பல்வேறு வகைப்பாக்கள் பயன்படுத்தப்பட்டன. காலப் பேர்க்கில், பயன்படுத்தப்பட்ட அவை பல்கிப் பெருகித் துறை, தாழிசை, விருத்தம் எனும் பாவினங்கள். ஏற்றமிகு இலக்கிய வடிவங்கள் தோன்றின் சிற்றில்க்கியங்களுள் வெண்பா, மாலை, கலம்பகம், விருத்தம், வஞ்சி, சிந்து எனும் பெயரோடு கூடியவை யாவும் (யாப்பு வேறுபட்டால்) வெவ்வேறு வகையான இலக்கியங்களாக வளர்ந்தன்வயாகும். இன்றைய புதுக்கவிதைக்கு வடிவம் என ஒன்று இன்னும் சரிவர அமையவில்லை. மற்றும். - காப்பியங்களும், நாடகங்களும் * : சங்ககாலத் தன்னுணர்ச்சி தனிப்பாடல்களில் இருந்து வேறுபட்டவை. இக்காலத்திய இலக்கிய உலகில் செங்கோலோச்சும் உரை நடையால் அமைந்த சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை முதலியன வடிவ அமைப்பில் வேறுபட்ட இலக்கியவகையாகும். வடிவ அடிப்படையில் செய்யப்படும்.இலக்கியப் பாகுபாடு, மிகவும் பழமையானமுறை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கவிதையில் பொதுமைத்தன்மையைப் பலவாறாகப் பிளேட்டோ விளக்கியுள்ளார். -- இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு கலைஞனுடைய தொழிவை துட்iம்ாக விள்க்கியுள்ளார். بیمعوس و پیبیاتی چه عیبیابیم جمه ot. K. William. winstätt and Clearnth Brooks, Literary criticism: A short History, p. 426. 。。。 。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/70&oldid=751287" இலிருந்து மீள்விக்கப்பட்டது