பக்கம்:இலக்கியக் கலை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் இலக்கியம் 69 அது தோன்றுகிறதோ அந்தக் காலத்திற்கு ஏற்ற பல கருத்துக் களைக்கொண்டே, அது இருக்கும் என்றுகூறத் தேவையில்லை’ எத்தகைய மக்கள் இனத்திற்காக அது தோற்றுவிக்கப்படு கிறதேர் அக் கூட்டத்தாரிடை அதன் செல்வாக்கு உயர்ந்து, காணப்படும் சிற்சில சமயங்களில் தோன்றும் சில நூல்கள். எல்லையற்ற செல்வாக்குப் பெற்று மிளிர்தலையுங் காணலாம். அந் நூல் தோன்றும் காலத்தில், மக்கள் சமுதாயத்தை என்ன எண்ணம் பிடித்து ஆட்டுகிறதோ, அவ்வெண்ணத்தை அடிப் படையில் கொண்டு தோன்றும் ஒரு நூல் செல்வாக்குப் பெறுதலில் வியப்பு ஒன்றுமில்லை. இங்ங்ணம் அதிகச் செல்வாக்கை, ஒரு நூல் ஒரு காலத்தில் பெற்று விளங்குவதால், அந் நூல் சிறந்தது என்று கூறுவதற்கில்லை. உண்மையில் அது மிகச் சாதாரணமான ஒன்றாகக்கூட இருக்கலாம். புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்கள் தமிழ்நாட்டில் இன்னும் சில ஆயிரம் பிரதிகட்குமேல் செலவாகவில்லை. ஆனால், கதைப் புத்தகங்களும், கதைகளையே கொண்டு வெளிவரும் வார திங்கள் இதழ்களும் பல ஆயிரக்கணக்கில் செலவாகின்றன. இதனால் இவை சிலப்பதிகாரத்தைவிடச் சிறந்தவை என்று. யாருங் கூற முன்வருவதில்லையே? இத் திங்கள், வார இதழ்களைப் போலவே சில நூல்களும் தோன்றுகின்றன. இத்தகைய நூல்கட்கு இன்றைய தமிழ் நாட்டில் பஞ்சமேயில்லை. புற்றீசல்கள் போலத் தோன்றும் இந்நூல்கள், அவ்வீசல்கள் போலவே மறைந்தும்விடும், சில ஆண்டுகள் அல்லது ஒரு தலைமுறை கழிந்தபின்னர். ஒருவரும் இத்தகைய நூல்களைக் கண்ணெடுத்துப் பாரார்: அதோடு மட்டுமன்று. இதனை விரும்பிக் கற்ற தங்கள் முதல் தலைமுறையார்களின் மதியைக் கண்டு வியப்பும் அடைவர். புற்றீசல் நூல்கள் இதிலிருந்து அறியப்படும் உண்மை ஒன்றுண்டு. நூல் மட்டுமன்று; எந்த ஒரு கல்ையும், தான் தோன்றுங் காலத்து வாழும் மக்களினத்தின் மனப்பான்மைக்கு இரை போடுவதாயின், அக்கலை நீண்டநாள்கள் வ்ர்.ழமுடியாது. மக்கட் கூட்டத்திற்குப் பொதுவான சில அடிப்படைப் பண்புகள் உண்டு. இவற்றை யல்லமல், சில உணர்ச்சிகள் காட்டாற்று வெள்ளம் போல் வந்து சில சமயங்களில் மக்களைப் பிடித்தாட்டுவதுண்டு. வெள்ளம் வருகிற வேகமும், அது அடங்குகிற வேகமும் கற்பனைக் கடங்காத விரைவில் முடிந்துவிடும். அத்தகைய உணர்ச்சிப்பெருக்கில் தோன்றும் நூல்களும் அவ்வுணர்ச்சி அடங்கியவுடன் பயனற்றுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/87&oldid=751305" இலிருந்து மீள்விக்கப்பட்டது