பக்கம்:இலக்கியக் கேணி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்வைக் கோப்பெருநற்கிள்ளி 113

சோழர், அறங்கெழு நல்லவை உறந்தை' (அகம்-98) என்பன இதனை வலியுறுத்தும். இவ்வரும் பெறல் மர பின் பெரும் பெயர் மூதூர் பல செந்தமிழ்ப் புலவர்களைத் தோற்றுவித்த பெருமையுடையது; இளம்பொன் வாணி களுர், ஏணிச் சேரி முடமோசியார், மருத்துவன் தாமோ தரனர், முதுகண்ணன் சாத்தனர், முதுகூத்தனர் என்ப வர் உறையூரொடு சார்த்திக் கூறப்பெற்ற செந்தமிழ்ப் புலவராவர். --

தித்தன்

இவ்வுறையூரில் தித்தன் என்ற சோழ மன்னன் ஆட்சி செய்து வந்தான். இவன் ஒரு பெருவீரன்; பெறலருங் குரிசில்; சிறுகண்யானையும் பரிநன்மாவுமுடை யவன்; மழைவளம் போலத் தரும் வண்மையுடையவன். இத்தகைய சீர்சான்ற விழுச்சிறப்பினையுடைய தித்தற்குப் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி என்னும் மகன் இருந் தான்: ஐயை என்னும் ஒரு மகள் இருந்தனள். ஐயை சிறந்த கற்புடையவள். இவளது கற்பின் சிறப்பு நோக்கி, ஐயை தந்தை என்று (அகம்-6இல்) தித்தன் புகழப் பெற்றுள்ளான்.

போர்வைக் கோப்பெருநற்கிள்ளி

இவன் மற்போரில் வல்லவன்: போரெனில் புகலும் புனைகழல் மன்னவன்; அடிபுனை தொடுகழல் மையணல் காண்: போரெதிர்ந்து போர்க்களம் புகினே விரைந்து வெல்லும் பெருந்தோளன். யாதுகாரணத்தாலோ

தங்தைக்கும் தனயனுக்கும் மனவேற்றுமை யுண்டா

8