பக்கம்:இலக்கியக் கேணி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. இலக்கியக்கேணி

கண்டத்திலும் கருவியிலும் பிறக்கும் பாட்டு' என்றும், (செ. 741 இல்) சீவகன் வீணை வென்ருன் ' என்ற விடத்து, ' யாழும் பாட்டும் வென்ருன் ' என்றும் பொருள் தரப்பெற்றுள்ளது. என்வே யாழும் மிடறும் உடன் நிகழ்ந்த இசைக்கே வீணை என்று பெயர் : என்று தோன்றுகிறது.* காரைக்கால் அம்மையார்

திருஞானசம்பந்தருக்கும் காலத்தால் முற்பட்டவ ராகிய காரைக்கால் அம்மையார் பாடிய திருவாலங் காட்டு மூத்த திருப்பதிகத்தில் பின்வரும் பாடலில்

வீணை குறிக்கப் பெற்றுள்ளது:- -

துத்தம்கைக் கிள்ளே விளரி தாரம்

உழையிளி ஓசைபண் கெழுமப் பாடி சச்சரி கொக்கரை தக்கை யோடு

தகுணிதம் துந்துபி தாளம் வீணை மத்தளம் கரடிகை வன்கை மென்ருேல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்(து)

அத்தனை விரவினே டாடும் எங்கள்

அப்பன் இடம்திரு ஆலங் காடே.

தேவாரத்தில் யாழும் வீணையும்

திருநாவுக்கரசர்

மாசில் வீணையும்...... கீழலே; மண்ணுர்ந்த வீணை பயின்ற......:

  • பாணர் கைவழி என்ற நூல் பக்கம் 47-50 பார்க்க. t இங்கிருந்து காணும் மேற்கோட் பகுதிகளுட் சிலவற்றைத் திருப்பனந்தாள் செந் தமிழ்க் கல்லூரிப் பேராசிரியர் மதுரகவி, வித்துவான் திரு. தா. ம. வெள்ளே வாரணம் அவர்கள் தொகுத்துதவிஞர்கள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/83&oldid=676778" இலிருந்து மீள்விக்கப்பட்டது