பக்கம்:இலக்கியக் கேணி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீணை 85

சேரமான் பெருமாள்

சுந்தரர் காலத்தவர் சேரமான் பெருமாள்; அவர்

பெற்ற திருமுகப் பாசுரத்தில், ' பண்பால் யாழ்பயில்

பாணபத்திரன்' என்றுள்ளது.

அவருடைய திருக்கைலாய ஞான உலாவில் (24) மன்னும் அகத்தியன் யாழ் வாசிப்ப’; (46) குடமுழவம் கொக்கரை விணை குழல் யாழ்; (122) காமரம் யாழ் அமைத்து: (141) இன்னிசை வீணையை வாங்கி; (148) மன்னிய வீணையும் கைவிட்டு என்று யாழும் வீணையும் குறிக்கப்பெற்றுள்ளன.

மாணிக்கவாசகர்

இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க (திரு வண்டப் பகுதி-35); இன்னிசை வீணையர் யாழினர் ஒரு பால் (திருப்பள்ளி யெழுச்சி-4); பொன்னியலும் திரு மேனி ...... வீணை முரன்றெழும் (திருப்படையாட்சி-6).

மேலே காட்டியவாறு சைவ சமய குரவர் நால் வரும் சேரமான் பெருமாளும் வீணையையும் யாழையும் பல இடங்களில் குறித்துள்ளனர். சிவபெருமான் நல் வினை வாசிக்கும்” என்றும், கையில் வினை வைத் தார் ” என்றும் கூறப்பெறுகிருர், அவர் தம் கையில் யாழும் வைத்தார் ” என்றும் சொல்லப் பெறுகிரு.ர். இதல்ை யாழும் வீணையும் ஒன்றே என்று கருத இட முண்டு. +.

ஆளுல், " அறைகலந்த குழல்மொங்தை வீணை யாழும் ' என்றும், ஏழிசை யாழ்விணை முரலக் கண்

டேன்" என்றும். யாழையும் வினையையும் அப்பரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/86&oldid=676781" இலிருந்து மீள்விக்கப்பட்டது