பக்கம்:இலக்கியச்சுவை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

83 மிகமோசம்‌! முதலாளித்துவப்‌ படகு மோதிச்‌ சிதறுவது எப்போது? உனது உலகம்‌ காத்திருக்கிறது; கணக்குத்‌ தீர்க்கும்‌ நாளை- மீட்சி பெறும்‌ நாளை எதிர்நோக்கி பொறுமையிழந்து காத்திருக்கிறது.”

தேவகன்னிகள்‌ சாட்சியம்‌ லெனினது தெளிவான, நேருக்கு நேரான சுரீரென தைக்கும்‌ இச்சொற்கள்‌ தேவகன்னிகளை உருக்கி விடு கிறது. அவர்கள்‌ சேர்ந்து பாடுகின்றனர்‌. இறைவனுடைய உலகின்‌ நிலையை அவர்கள்‌ விளக்குகின்றனர்‌. "நல்லறிவு இன்னும்‌ கட்டுப்பட்டே இருக்கிறது. அன்பும்‌ அருளும்‌ நிலை பெறவில்லை, ஓ, தெய்வீக ஓவி யனே, (இழைவா) உனது ஓவியத்தில்‌ இன்னும்‌ குறை ஏதோ காண்கிறது. உனது ஒவியம்‌ மறைவிடத்தே கேட்பா ரற்றுக்‌ கடக்கிறது. கேளிக்கைக்காரனும்‌, உன்‌ பெயரால்‌ எத்திப்‌ பிழைப்பவனும்‌, தலைவன்‌ என்போனும்‌, சந்நியா சியும்‌ உலவியே வருகின்றனர்‌, உனது பிரபஞ்சத்தில்‌ சமரச நிலையைக்‌ காணோம்‌. ஏற்றத்‌ தாழ்வுகள்‌ மலிந்த பழைய

ஏற்பாடு இன்னும்‌ நீடித்தே வருகிறது.?? இறைவன்‌ கட்டளை

தேவகன்னிகளின்‌ இப்பாடல்‌ சர்வேசுவரனைக்‌ கிளர்ச்சியடையச்‌ செய்கிறது. ஆழ்ந்த குரலில்‌, காம்பீர்யம்‌ மிக்க உறுதியுடன்‌ அவர்‌ பேசுகிறார்‌. பாடுபட்டுப்‌ பயிர்‌ வளர்த்துக்‌ காத்து அறுவடை செய்பவனுக்குப்‌ பயன்படாத தானிய மணிகள்‌ அனைத்துக்கும்‌ நெருப்பிடுமாறு வானவ ர்‌ களுக்கு இறைவன்‌ ஆணை இடுகிறார்‌. “எனது உலகின்‌ ஏழை எளியோரைத்‌ தட்டி எழுப்பு

வீராக! ஆதிக்கக்காரர்களுடைய அரண்மனைகளின்‌ அஸ்தி வாரங்களை உலுக்கிச்‌ சிதையுங்கள்‌. அடிமைகளின்‌

ரத்தத்தில்‌ சூடேற்றுங்கள்‌! வல்லூறை

டும்‌ ஆற்றலைச்‌

சிட்டுக்கு

எதிர்த்துப்‌ போரா

அளியுங்கள்‌!

உழுபவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/89&oldid=1523403" இலிருந்து மீள்விக்கப்பட்டது