பக்கம்:இலக்கியச் சாறு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு 193

நாடுகளில் புகழ் பரப்பிய தமிழ் நாடு என்று மேற்றிசைப் பெருமையைக் குறிக்கின்றார். இப்பழம் புகழ்ச்சியெல்லாம் எற்றுக்கு? எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு விடுதலைச் சத்தி பிறக்க வேண்டும் என்பதற்காக,

பாரதியார் இந்தியநாட்டுப் பற்றுப்போல் தமிழ்ப் பற்றுக்கொண்டவர். பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்றதுபோல் தாமறிந்த மொழிகளிலே நல்லமொழி தமிழ்மொழி என்று வீறு பேசியவர். சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்று சின்னஞ்சிறு குழந்தைக்கே தமிழின் உயர்வை அறிவுறுத்தியவர். தமிழ்ப்பாரதம் அல்லது தமிழிந்தியா என்பது நம்புலவர் கண்ட பாரதீயம் ஆகும். நம் மொழி மட்டுந்தான் சிறப்புடையதா, நம்மொழியிற் பாடிய முப்புலவர்களைப்போலச் சிறந்தார் பிறமொழியில் எப்புலவரும் இல்லையே; இது பற்றுக் கொண்டு சொல்லும் முடியன்று உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை என்று பாரதி மொழி முரசே கொட்டுவர். ஆதிசிவன் பெற்றுவிட்டான்' எனத் தமிழின் தெய்வப் பிறப்பையும், காதில், விழுந்த திசைமொழியெல்லாம் பெயர்கூடத் தெரியாமல் யாவும் அழிவுற்றிறந்தன என்பதனால்தமிழின் இறவாத்தன்மையையும் எடுத்துக் காட்டுவர். இவ்வுலகத்து அமர வாழ்வு வேண்டுமென்றால்தமிழமுதினைச்சுவையுங்கள் இன்பத்தேன் வேண்டுமென்றால் செந்தமிழ்நாடு என்று சொல்லுங்கள் என மொழிமேல் வைத்து நல்வழி கூறுவர். இவ்வாறெல்லாம் தமிழின் பழமையையும் பெருமையையும் விரிப்பதன் நோக்கம் என்ன? தெருவெல்லாம் தமிழ் முழங்கவேண்டும் என்பதே.

பழமைவேர்

- பெண்ணுரிமை பார்தியத்தில் ஒன்று. இவ்வுரிமை வேண்டும் பாரதியார் ஈண்டும் பழமைபேசப்பார்க்கின்றோம். ஆணுக்குப் பெண் சமம் என்று முற்கால நூல்கள் கூறும்; ஆணே உயர்வு பெண் அடிமை என்று பிற்கால நூல்கள் கூறும் என்பது பாஞ்சாலி சபதத்தில் வீடுமன் பேச்சு

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் - يهديه பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்