பக்கம்:இலக்கியச் சாறு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

வ.சுப. மாணிக்கனார்



மயங்காது கூறுவது எனவும் பிறகுற்றங்கள் இல்லது எனவும் தொல்காப்பியர் எடுத்துக் காட்டினர். அரில்தபத் தெரிந்து' என்பது பாயிரம். அரங்கேற்றத்தின் பின் இப்பாயிரம் பனம்பாரனாரால் வழங்கப் பெற்றது. மன்பதை ஏற்கலாம், மாணவர் கற்கலாம், படி எடுத்துக்கொள்ளலாம் என்பதற்குப் பாயிரம் முத்திரையாகும்.

ஆயிர முகத்தான் அகன்ற தாயினும் பாயிரம் இல்லது பனுவ லன்றே

என்பதனால், பாயிரத்தின்ஆற்றல் பெறப்படும்.நூன்முகத்துப் பாயிரம் இல்லா ஏடு பனுவலாகவே மதிக்கப்படாது. திருக்குறள் அரங்கேற்றப்பட்டது என்றும், திருவள்ளுவ மாலை சிறப்புப் பாயிரம் ஆம் என்றும் சொல்லுப. சிலப்பதிகாரம் சாத்தனார் முன்னிலையிலும் மணிமேகலை இளங்கோ முன்னிலையிலும் அரங்கேறின. திருத்தக்கதேவர் சங்கப்புலவர் முன்னர் சீவக சிந்தாமணியை அரங்கேற்றிய போது, இளந்துறவி காமச் சுவையை இல்லறத்தாரும் வியப்பப் பாடவல்ல திறம் யாண்டுப் பெற்றனர் என்ற வினா எழுந்ததாம். சிந்தாமணிக்கு நச்சினார்க்கினியர் எழுதிய முதலுரை சமணப் பெரியோர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டிலது என்றும், சமண மரபுகளையும் மெய்ம்மைகளையும் நன்கு கற்றபின் அவர் எழுதிய இரண்டாவது உரையே ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் அறிகின்றோம். இவர்தம் சமனவறிவுக்கு முத்தியிலம்பகவுரை சான்றாகும். இச்செய்தியால் கவியரங்கேற்றம் போல உரை யரங்கேற்றமும் நிகழ்ந்தமை அறியப்படும். இராமாயணம்

கம்பர்தம் இராமாயண அரங்கேற்றம் பற்றிய குறிப்புக்கள் செவி வழியாக வந்துள. தில்லை மூவாயிரவர்களும் திருநறுங்கொண்டைச் சமணர்களும் இக்காப்பியத்தை முதலில் ஒப்பினார்கள். இச்செய்தி இந்நூல் மதவெறுப்பற்ற பொது நோக்குடையது என்பதற்கு ஒரு சான்று. 'உலகம் யாவையும் தாமுள வாக்கலும் என்னும் கடவுள் வாழ்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/36&oldid=551034" இலிருந்து மீள்விக்கப்பட்டது