பக்கம்:இலக்கியச் சாறு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

வ.சுப. மாணிக்கனார்



படைப்புமனம்

இடைக்காலக் கல்வியாளர்க்கு யாப்பு மனம் மிக்கிருந்தமையின் புதுப்புது யாப்புக்கள் படைத்தனர். அப்படைப்புக்களுள் சிறந்த ஒன்று காரிகை என்னும் கட்டளைக் கலித்துறையாகும். இது வெண்பாவும் வெண்பாவினமும் கலந்தது. ஒரடிக்குள் தளை இருந்தாற் போதும்; ஒரடியின் இறுதிக்கும் வரும் அடியின் முதலுக்கும் தளை பார்க்க வேண்டா. இப்புதுயாப்பு கோவை நூல் வளர்ச்சிக்குப் பயன்பட்டது. இந்த யாப்பில் மக்கட்குக் கவர்ச்சிக்குப் பயன்பட்டது. இந்த யாப்பில் மக்கட்குக் கவர்ச்சியிருந்ததாலன்றோ யாப்பருங்கலக் காரிகையும் வீரசோழியமும் கட்டளைக் கலித்துறையில் செய்யப்பட்டன. திருமந்திரச் செய்யுட்கள் கலிவிருத்தம் என்ற பெயர் பெற்றாலும் அவ்வளவும் சீரும் தளையும் சிதையாத வெண்பாத்தன்மையன.

என்பே விறகா இறைச்சி யறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி என்பொன் மணியினைக் காண வொண்ணாதே இவ்வாறு சீர் தளை அடி முதலியவற்றை மாற்றியமைத்து இனியும் புது யாப்புகளைப் படைக்கலாமா என்பது பற்றிச் சிந்தனை செய்யவேண்டும். இத்தகைய இலக்கியக் கண்டு பிடிப்புக்கள் தமிழின் மேல் வளர்வுக்குத் தேவை.

நல்லமைப்புக்கள்

இடைக்கால இலக்கியங்கள் மிக நல்ல அமைப்பு உண்ட்யவை என்பது என் கருத்து. இவ்மைப்பை அறிவான முறையில் பயன் கொள்ள வேண்டும். கோவை, கலம்பகம், உலா, பரணி இவற்றில் பாட்டுடைத் தலைவர்கள் உண்டு. இவர்கள் மானிடத் தலைவர்ளாக இருக்கும்போது, இவ்விலக்கியங்கள் உலகியலும் வரலாறும் தழுவுகின்றன. கடவுளர்களைத் தலைவர்களாகக் கொள்ளும்போது உலகியலும் வரலாறும் இழக்கின்றன. கலிங்கத்துப்பரணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/52&oldid=551050" இலிருந்து மீள்விக்கப்பட்டது