பக்கம்:இலக்கியச் சாறு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

வ.சுப. மாணிக்கனார்



இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணுறும் அம்மென்றால் ஆயிரம்பாட் டாகாதோ என்று அளக்கின்றார் காளமேகம்.

மூச்சு விடுமுன்னே முந்நூறும் நானூறும் ஆச்சென்றால் ஆயிரம்பாட் டாகாதோ என்று விரிக்கின்றார் அதிமதுரக் கவிராயர். உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை ஒப்பிக்கும் எந்தன் உளம் என எதனைப் பெறவும் ஒரு பாட்டு என்று எளிய பண்ட மாற்றாக மதிக்கிறார் ஒளவை. ஒருவர் முன்னிரண்டடிகளைப் பாடுவது; இன்னொருவர் பின்னிரண்டடிகளை முடிப்பது என்பது புலவர் கண்ட ஒரு யாப்பு விளையாட்டு. இரட்டையருள் குருடர் இரண்டடி பாடிநிறுத்திக் கொள்வார்; பிற்பகுதியை முடவர் பாடி முடித்து விடுவார். இஃது ஒருநிலை. வேறு சில பாடல்கள் உள. ஒருவர் முற்பகுதியைப் பாட அதனைக் கேட்டுக் கொண்டிருந்த மற்றொருவர் அவர் கருத்தை மாற்றுவதற்காக மிக விரைந்து பிற்பகுதியைப் பாடிவிடுவார். எவ்வளவு யாப்புப் பயிற்சியிருந்தால் இங்ஙனம் முந்திக் கொண்டு பாடவரும் என்று எண்ணிப்பாருங்கள்! \ சோழன்புலமை

ஒட்டக்கூத்தர்குலாத்துங்கசோழன் அவைப்புலவர் ஆவர். இவர்சோழன் அகவாழ்க்கையிலும் அரசியல்வாழ்க்கையிலும் நெருங்கிய தொடர்புகொண்டவர். சோழன் ஆட்சிச் சிறப்பை நேரில் அறிந்தவர். இவன் ஆட்சியில் ஆராய்ச்சிமணி அசையவில்லை:இவன்குடையோபரந்து விரிந்தது என்று பலர் சூழ்ந்த அவை முன் பாராட்ட விரும்பிய ஒட்டக்கூத்தர்,

- ஆடுங் கடைமணி நாவசை யாமல் அகிலமெலாம்

நீடுங் குடையைத் தரித்த பிரான்இந்த நீணிலத்தில் என்று பாடி வருவதைக் கேட்டான் குலோத்துங்கன். தன் செவ்விய ஆட்சிக்கு ஒட்டக்கூத்தரே துணை என்பதை உட்கொண்டான். மேலும் தன் ஆசான் என்பதையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/60&oldid=551058" இலிருந்து மீள்விக்கப்பட்டது