பக்கம்:இலக்கியச் சாறு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தற்சிறுமை

பெருமை பேசுவோரைப் பார்க்கின்றோம்; தற்பெருமை பேசுவோரையும் பார்க்கின்றோம். தற்சிறுமை தாமே பேசிக் கொள்வாரையும் பாடிக் கொள்வாரையும் தெய்வப் பாசுரங்களில் அன்றி வேறு எங்கே பார்க்க முடிகின்றது? அக இலக்கியம் காதலர்களுக்குள் தற்பெருமை பேச இடங்கொடுத்துக் காதலுணர்வை வளர்க்கும்.புறவிலக்கியம் ஒன்னார்முன்நெடுமொழி கூற இடங்கொடுத்துவிரவுணர்வை வளர்க்கும். அருளிலக்கியமோ இறைவன்முன் தற்சிறுமை பேசவைத்து அன்புணர்வை வளர்க்கும். காதல்மரபு

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு (1088)

களவுப் புணர்ச்சியில் தலைவியின் துதலொளி கண்டு காம வருத்தம் உற்ற தலைவனது கூற்று இக்குறள். என் வலி எத்தகையது? போர்க்களத்து நேரில் என்னை எதிர்த்துத் தோல்வி கண்டவரிடம் கேட்டவர்கள் நடுங்குவார்கள். கண்டாரும் கண்டார்வாய்க் கேட்டாரும் பாராட்டும் என் மறப்பெருமை இவள் சிறுநுதலுக்குப் பள்ளிக் களத்துப் புறங்காட்டி விட்டதே என்று கூறுகின்றான். ‘நண்ணாரும் உட்கும் என்பீடு என்பது தற்புகழ்ச்சி ஆகாதா? இவள் முன் அப்பெருமை போயிற்று எனக் கழிந்ததற்கு இரங்கலின் தற்புகழ்தல் அன்றாயிற்று’ என்பர் பரிமேலழகர். தற்புகழ்தல் இல்லை எனின் தற்சிறுமை என்று கூறலாமா? என்பது ஒர் எதிர்வினா.புணர்ச்சியின்பம் நோக்கிமனைவி முன்பு:சொல்லிக் கொள்ளுதலின் தற்சிறுமையும் ஆகாது.

ஞானியார் நூற்றாண்டுவிழாமலர்க் கட்டுரை-1973,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/63&oldid=551061" இலிருந்து மீள்விக்கப்பட்டது