பக்கம்:இலக்கியச் சாறு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

வ.சுப. மாணிக்கனார்



தலைப்படு சால்பினுக் கும்தள ரேன்சித்தம் பித்தனென்று மலைத்தறி வாறில்லை யாரையுந் தேற்றுவன் எத்துணையும் கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற் றம்பல வன்கயிலை மலைச்சிறு மான்விழி யாலழி வுற்று மயங்கினனே (25) திருக்கோவைத் தலைவன் பாங்கனுக்குத் தன் வலியழிவு கூறும் துறை இது. நான் தளர்ந்ததாகவோ பிறழவுணர்ந்ததாகவோ என்னை யாரும் சொல்லியதில்லை. தளர்ந்தாரைத் தேற்றும் அவ்வளவு சால்புடையவனாக இருந்தேன்.அஃது ஒரு காலம் இப்போது ஒரு சிறு மான் கடைவிழிக்கு அறவே தோற்றேன் என்கின்றான் தலைவன். இதுதற்பெருமையாகாதா? என்ற

வினாவை எழுப்பிக் கொண்டு பேராசிரியர் ஈண்டு

தன்னையுணர்த்தல் என்ற குற்றம் தங்காது, சால்பு முதலியனவற்றை இப்பொழுது உடையேன் என்னாமையின் என்று காரணம் கூறுவர். தன்னையுணர்த்தல் என்ற குற்றம் இல்லை எனின், சிறு மான் விழியால் அழிவுற்று மயங்கினனே என்பதனால் தன்னைத் தாழ்த்தல் என்ற குற்றம் தங்காதா? அன்புடைய ஒரு பெண்ணின் மான்பார்வைக்கு ஆடவன் மயங்குதல், மயங்க வேண்டுதல் இயற்கை. அந்த இயற்கைக்கு வயப்படாமைதான்குற்றமாகும்.ஊடலில் தோற்றவர் வென்றார் (குறள். 1327) என்பதனால் இல்லறப்போரின் தனித்துவம் பெறப்படும்.இவை தற்பெருமையும் ஆகா, தற்சிறுமையும் ஆகா, இவை வழக்கொடு சிவணிய இலக்கிய மரபுகள் ஆம் வீரமரபு r

தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும் தான்தற் புகழ்தல் தகுதி யன்றே. மன்னுடை மன்றத் தோலை தூக்கினும் தன்னுடை யாற்றல் உணரார் இடையினும் மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும் தன்னை மறுதலை பழித்த காலையும் - தன்னைப் புகழ்தலும் தகும்புல வோற்கே.

முதற் நூற்பா தற்புகழ்தல் ஆகாது என மொழிந்தாலும், இரண்டாவது நூற்பா அஃது ஆமிடங்களைச் சுட்டிக் காட்டுகின்றது.நூற்பா கூறுவதுபோல, இப்புகழ்ச்சி புலவர்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/64&oldid=551062" இலிருந்து மீள்விக்கப்பட்டது