பக்கம்:இலக்கியச் சாறு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியச் சாறு

73



பிர்மன் அன்னமாகி அவனது முடியைக் காணப் பறந்தான். தனி முதினைப்பு பயணிளரிக்கவில்லை என்பது புராண முடிவு. இம்முனைப்புச் செயலைத் திருவாசகம் அழுத்தமான சொற்களால் தாக்கிப் பாடுகின்றது. -

1. மாலறியா நான்முகனும் காணா மலையினை’ 2. செங்கண் நெடுமாலும் சென்றிடத்துங் காண்பரிய 3. திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை’ 4. பிரமம் அரியென் றிருவரும்தம் பேதைமையால்

பரமம் யாம்பரம் என்றவர்கள் பதைப் பொடுங்க”

5. நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை'

6. திகழத் திகழும் அடியும் முடியும்

காண்பான் கீழ்மேல் அயனும் மாலும் அகழப் பறந்துங் காண மாட்டா அம்மான்’ 7. பங்கயத் தயனுமால் அறியா நீதியே’ இத்தொடர்களில் ஆளப்பட்ட குத்தற் சொற்களைத் திருமாலும் நான்முகனும் படிக்கும் வாய்ப்பிருந்தால், எவ்வளவோ புண்படுவர். திருமாலால் அறிய முடியாதவனும், நான்முகனால் காண முடியாதவனும் ஆய சிவன் சிறு பொருளா? வெள்ளிடைமலை என்பர். மலையாக இருந்தும் ஏன் காண முடியவில்லை? மால் தன் பெயருக்கு ஏற்ப அறியா மயக்கத்தவன்.ஒரு முகம் உடையவன் காண்பான்,நான்கு முகம் உடையவன் எவ்வாறு காண வல்லான் என்று இருவர்தம் பெயர்களிலே காரணம் அமைந்து கிடப்பதாகத் திருவாசகம் குறிப்பிற் புலப்படுத்துகின்றது. செங்கண்ணன் ஆக இருந்தாலும் நெடுமால் ஆதலால் கான முடியவில்லையாம். திருமால் பன்றியாய்க் கீழ்ப் பிறப்ப்ெடுத்தும் உணர முடியவில்லையாம். தம்மைத் தாமே பரமம் என்று அவ்விருவரும் தம்மைச் சொல்லிக் கொண்டது பேதைமையாம். ஓங்கி வளர்ந்த நெருப்பினை நெடியவனாக இருந்தும் பார்க்க முடியவில்லையாம்.நீ இப்பக்கம் செல், நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/75&oldid=551073" இலிருந்து மீள்விக்கப்பட்டது