பக்கம்:இலக்கியச் சாறு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 - 6)}.5ill. மாணிக்கன்ார்

م------*

அப்பக்கம் வருகின்றேன்; ஆளுக்கு ஒரு வழியாகப் போய்த் தேடிப்பிடித்து விடலாம் என்பதுபோல, இருவரும் அகழ்த்து பறந்து முயன்றும் பேரொளிப் பிளம்பாக விளங்கும் அடிமுடியைக் காண மாட்டாதவர் ஆயினராம். அயனாலும் அரியாலும் சிவன் அறியப்படாமை நீதியாம். அடிமுடி தேடிய நிகழ்ச்சி பற்றித் திருக்கோவை யுரையாசிரியர் 'அன்னம் திருவடித் தாமரையையும் பன்றி சடைக்காட்டையும் தேடுதல் முறை; அவ்வாறு தேடாது தமது அகங்காரத்தினால் மாறுபட்டுப் பன்றி தாமரையையும் அன்னம் காட்டையும் தேடினதால் கண்டில’ எனவும் விளக்கம் தருவர்.

இரு தலைவர்களும் மேற்கண்டவாறு சொற்றாக்கம் பெற்றனர். எனின், ஏனைத் தேவரின் பரிசழிவு சொல்ல வேண்டுமா அடிமுடி தேடிய நிகழ்ச்சி அரிக்கும் அயனுக்கும் உரியது. கடலில் எழுந்த நஞ்சு கண்டு அஞ்சியது எல்லாத் தேவர்க்கும் பொது, நஞ்சுக்கு அஞ்சி அலறியதனால் . இருதலைவர் முதலாக எல்லாத் தேவர்களும் ஆற்றல் அற்றவர்கள் என்பது வெளிப்படையாகின்றது. அந்நஞ்சை அமுதம்போல் உண்டு அவர்களைக் காத்தளித்தான் சிவன் என்பதனால் அவன் முழு முதல் என்பது வெளிப்படை யாகின்றது. -

1. “நஞ்சம் அஞ்சி ஆவ எந்தாய் என்று அவிதா இடும்

நம்மவரவரே 2. சிற்றுயிர்க் கிரங்கிக் காய்சின ஆலமுண்டாய்” 3. “ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ இத்திருவாசக அடிகளிலும் சொற் குத்தல்கள் உள. மனிதர்கள்போல், நஞ்சைப் பார்த்ததும் வெருண்டு ஒட்டமிட்டவர்கள் தேவர்கள் ஆவார்களா? இல்லை, நம்மவர்களாம். யாருக்காகச் சிவன் ஆலம் உண்டானெனின் நம்போன்ற சிற்றுயிர்க்காம், நஞ்சினைச் சிவன் உண்ணாவிட்டால் மேன்மையானவர் என்று நினைத்து இறுமாந்திருக்கும் தேவரெல்லாம் செத்தொழிவராம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்_சாறு.pdf/76&oldid=551074" இலிருந்து மீள்விக்கப்பட்டது