பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் உளவியலும் 105 கலைப் படைப்பில் வெளியிடுகிறார்கள். எழுத்தாளர்களை ஒரு தனி வகையில் அடக்க முடியாது. காப்பியக் கவிஞனை, நாவலாசிரியனிடம் இருந்து வேறுபடுத்தலாம். இது படைப் பின் அடிப்படையில் வேறுபடுத்துவது. படைப்பில் இருந்து உளவியல் வேறுபாட்டை அறிவது. தொல் கவிஞன் (magician), புதுமைக் கவிஞன், துண்மை விளக்குவோன், சர்ரியலிஸ்டு (Surealist) இவர்கள் யாவரும் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள். இவர்களது ஆழ்உணர்வு விடுதலை தேடி நினைவு நிலைக்கு வருகிறது. இவ்விருவகைப் படைப்பாளிகளும் ஒருவரிடத்தை மற்றொருவர் பெற இயலாது. இவ்விரு எதிர்நிலைகளையும் நீட்ஷே, "துன்பவியல் நாடகத் தோற்றம்’ (The birth of a tagedy) என்ற நூலில் வெளியிட்டார். பிரெஞ்சு ரிபாட் இலக்கியக் கலைஞர்களைக் கற்பனையின் அடிப்படையில் இரு வகைகளாகப் (types) பிரித்தார். பிரிப்புக்கு நீட்ஷேயின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டார். மேலும் ஒருவகைப் பிரிவு ரூசேவினுடையது. கவலை யற்ற மகிழ்வான வகை; 2 குழப்பமான அவல வகை, 3 சம அவல வகை என மூன்று வகை. கவிஞனது உளவியல் பொருளுக்கும் கவிதைப் படைப் பிற்குமிடையே அமைந்த வேறுபாட்டை ஆராய்வோம். இவை: யிரண்டும் அழகியல் உள்ளுணர்வு என்பார் குரோச்சே (Croce), இதன் நேர் எதிர் கருத்து, லூவிஸ் (C. S. Leavis) தரும் அனு பவம், கவிதை. இப்பகுப்பும் நிறைவு தரவில்லை. கலைஞன் ஓர் இடைப்பொருளின் (மொழி, வண்ணம்) வழியாக ஒவ் வொரு கருத்தையும் தன் கலையால் வடிக்கிறான். முதிர்ச்சி. பெறாத அனுபவங்களைத் திரட்டுவதில்லை. சில எழுத்தாளர்கள் பண்டைய தொல்குடி நம்பிக்கை களைக் கொண்டிருந்தனர். சிலர் படுக்கையில் வைத்தே எழுது வர் (மார்க் ட்வெய்ன்), பால்சாக், சாமியார் உடையணிந்து கொள்வார்; வில்லர் எழுதும்போது அழுகிய ஆப்பிள் பழங் களை அருகில் வைத்திருப்பார். இதனை, ஆழ்உணர்வால் நிகழ்வதாகத் தற்காலப் பிராய்டியர்கள் கருதுவர். இதற்கு மாறாக மில்டன், ஜான்சன் எக்காலத்தும் எழுதலாம் என்று எண்ணினர். உளவியல் அறிஞரது ஆய்வுகள், தற்படைப் பாற்றல், புதிது காண்டல், கற்பனைத்திறன் போன்றவற்றைப் பற்றியும் அறிவியல், தத்துவம், அழகியல் துறைகள் சார்ந்த இலக்கியத் திறனாய்வு பற்றியும் அளவுகோல்களை உருவாக்கத் துணை செய்துள்ளன. . எட்கார் ஆலன்போ என்பவர் ஆக்கத்தின் தத்துவம், {Philosophy of composition), sran GpmG unirsi eropgeririr. 49/8