பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305 எத்தகைய துவக்க அழகியல் கூறுகளிலிருந்து எவ்வகை உத்தி களைக் கையாண்டு ராவன் (Raven) என்ற தனது படைப்பு உருவாக்கப்பட்டது என்று எழுதுகிறார். "இது ஜெர்மனிக்கு உரியதல்ல, மனித ஆன்மாவுக்குரியது” என்று எழுதினார். இதனை பிராய்டியர்கள், இலக்கியக் கருவை, ஆழ் உள்ளம் படைக்கிறது; நினைவுள்ளம் அதனைக் கலைவடிவில் படைக் கிறது என்று (ரெனி வெல்லாக் மற்றும் ஆஸ்டின் வாரன்) கூறுகிறார்கள். இலக்கிய ஆற்றல்: தற்காலக் கவிஞர் (இணைவு, உருவம், உருவகம், பொருள்-ஒலித்தொடர்புகள் இவற்றில் தேர்ச்சி); 2 கதையாசிரியர் (பாத்திர அமைப்பு, கதைத் திட்டம்). கவிஞனுக்குச் சொல் குறியீடு மட்டுமன்று, பிறிதொன்றை விளக்கவும் வல்லது. நாவலாசிரியர்கள் சொற்களைக் குறியீடு களாகப் பயன்படுத்தலாம். கருத்துக் கலவை-சொற்களைச் சேர்ப்பதுபோல-கருத்துக்களைச் சேர்ப்பது-கவிஞர்களுக்கு இருக்கும் திறன். நாவலாசிரியன் சொற்களைச் சொற்களோடு சேர்க்கிறான். இலக்கியப் படைப்பில் இரு உளநிலைகள் உள்ளன. அவை நினைவு, நினைவிவி என்பது லூயிஸ் என்பாரது கருத்து. படைப்புச் செயவில் ஆக்கியோன் உண்மையில் திட்டமிட்டு உருவாக்கியவற்றை இவர் விளக்கவில்லை. கதையாசிரியரின் பாத்திரப் படைப்பு, கதைத் தோற்றம்சொந்தப் படைப்பு-உலக மக்களை ஒட்டி அமைந்தது. பழைய இலக்கியங்களின் கதைக்கூறுகளை மேற்கொண்டுபாத்திர வகை-கதை கூறும் முறை-மரபையொட்டித்தான் அமைகின்றன. உ-ம். டிக்கன்ஸ் தன் ஆளுமையால் கதை மூலங்களை, கலைப்படைப்பாக மாற்றுகிறான். Realistமெய்யியல் போக்கு-மக்கள் வாழ்வியலைக் கூர்ந்து கற்கிறான். இவ்வாறு கவனிப்பது மட்டும் மெய்யியலான பாத்திரங்களைப் படைத்துவிடுமா என்பது ஐயமே. சில படைப்பாளிகள் தங்கள் படைப்புகள் தாமே என்று கூறுகிறார்கள். பிளாபர்ட் தமது படைப்பான மதாம்பொவாரி தானே என்று கூறினார். ஜெயகாந்தன், சில நேரங்களில் சில மனிதர்களில் பாத்திரங்கள் எல்லாம் தாமே என்கிறார். பாத்திரங்களுக்கும் நாவலாசிரியனது உண்மையான தன் மைக்கும் என்ன தொடர்பு? பல்வேறுபட்ட தன்மையுடைய பாத்திரங்களைப் படைப்பது அவனது வேறுபட்ட திறனைக் குறிக்கும். அவனது தன்மை தெளிவற்றது. பென்ஜான்சன் தெளிவான பாத்திரங்களைப் படைக்கிறார்.