பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியமும் உளவியலும் f07 கவிஞனது படைப்பில் அவனது தன்மை இராது, கவிஞ னது தன்மை எல்லாம் நிறைந்திருக்கலாம் என்கிறார் கீட்ஸ். மேலே விவாதித்த கொள்கைகள் படைப்பாளியின் உள வியல் பற்றியவை. இலக்கியப் படைப்பின் உளவியல் தன்மையை உளவியல் ஆராய்கிறது. உளவிய ர், கவிகளை வகைப்படுத்துவர்; அவன் மனக்கோளாறை விளக்குவர்; உள் நினைவு மனத்தையும் நாடி அறிவர். இலக்கியப் படைப்புகளைத் திறனாயவும் டெ 4 கள் விளக்க வும் உளவியல் கல்வி பயன்படுமா? படைப்பின் காரணத்தை யும் தன்மைகளையும் பலவகை உளவியல் கருத்துக்கள் விளக்கு கின்றன. எழுத்தாளனும் அவனது கருவிகளும் (Write and his Craft) என்ற நூலில் பல எழுத்தாளர்கள் எழுதும்போதும் தங்கள் மனநிலையையும் தேவையான சூழ்நிலைகளையும் பற்றி எழுதியுள்ளனர். முதலில் படைத்த பாத்திரங்கள், நிகழ்ச்சிப் படிமங்கள், சூழல் இவற்றை மாற்ற எழுத்தாளன் முயன்று தன் சக்திக்கேற்ற படைப்பை முழுமையாக்க அவனது உளவியல் கல்வி பயன்படுகிறது. எழுத்தாளனது பழக்கங்கள் (குடிப்பது, புகை பிடிப்பது, அபினி உபயோகிப்பது) இவை உளவியலில் மிகைப்படுத்தப் பட்டுள்ளன. சூழலைப் பற்றிய சரியான நோக்கும், நோக்கி னால் மனத்தில் தோன்றுகிற படிமங்களும், அதனைக் கையா ளும் இணைப்புத் திறனும் இருந்தால் எத்தப் பழக்கமும் கலைஞனைப் பாதிக்காது. இலக்கியத்தில் உள்ள பொருத்த மான பிளவுகள், முரண்பாடுகள், தொடர்புகள், திருப்பங்கள், தெறிக்கு முரணான நிலைகள் ஆகியவற்றை துணுகிக் காண உளவியல் கல்வி பயன்படும். சமகால உளவியல் கொள்கைகளை இலக்கியத்தில் குறிப் பிடுவது ஐயத்திற்கிடமாகலாம். உதாரணமாக, பிராய்டின் கொள்கையின் மூலம் கதேயையும் பொக்காஷியாவையும் ஆராய்வது. உலகிலேயே மிகச் சிறந்த உளவியல் அறிந்த படைப்பாளி டாஸ்டாயெவ்ஸ்கி என்று பல தற்கால எழுத் தாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். தற்கால மும்மூர்த்தி களான ஜாய்ஸ், பிரூஸ்ட், காப்கா மூவரும் டாஸ் டாயெவ்ஸ்கி செல்வாக்குத் தம் படைப்பில் உண்டு எனக் கூறுகிறார்கள். உளவியல் செய்திகள் கலைப்பயன் உடையனவல்ல. மனித னது உள்ளத்தை நேரே உணர்வதற்குப் படைப்பாளிக்கு அவை துணைபுரிகின்றன. சில தன்னுணர்வுக் கலைஞர் களைப் பொறுத்தவரையில் அவர்கள் உளவியல் உணர்வைக் - ఫౌ 岛 -