பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்


உள்ளடக்கம்

உலக நோக்கும் உள்ளடக்கமும்

சமூக மாறுதல், சமூகத்தின் முற்போக்கான வளர்ச்சி ஆகிய வற்றை உணராதவர்கள் கலை கலைக்காகவே, உருவமே கலையின் உயிர்நாடி, அதன் உள்ளடக்கம் எதுவாகவும் இருக்கலாம் என்று கூறுவார்கள். அனேகமாக இக்கொள்கை இன்று தேய்ந்து சுருங்கிப் போய்விட்டது.

எக்சிஸ்டென்ஷியலிதம் 'கணப்பொழுது'களின் உண்மையை மட்டும் உணர்கிறது. மனித வரலாற்றின் முரண்பாடுகளின் தொடர்ச்சியை அறிவதில்லை. எனவே மனித முன்னேற்றம், சமூக முன்னேற்றம், சமூகப்புரட்சி ஆகிய கருத்துக்களில் அவர்கள் ஈடுபடுவதில்லை கணப்பொழுதுகள் மனிதமனத்தை எப்படிப் பாதிக்கிறது என்பதைச் சித்தரிப்பதே இலக்கியத்தின் உள்ளடக்கம் என்று எக்சிஸ்டென்ஷியலிஸ்டுகள் கருதுகிறார்கள். கணப்பொழுது, வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட எல்லைநிலைகளில் சாவுபோன்று உள்ளத்தில் தீவிரமாகத் தாக்கம் பெறுகிறது. மனித மனத்தின் உணர்ச்சிமிக்க கணப்பொழுதையே இவர்கள் உள்ளடக்கமாகக் கொள்கிறார்கள். வாழ்க்கையைவிட சாவு நிலையை இவர்கள் வருணிக்கிறார்கள். வாழ்க்கையின் பயனின்மையையும் வெறுமையையும் இவர்கள் வருணிக்கிறார்கள். பண்டையச் சித்தர்கள் வாழ்க்கையை நோக்கியதுபோலவே இவர்களும் பார்க்கிறார்கள்.

சர்ரியலிஸ்டுகள், "மரபுகள் தடித்து உள்ளத்தை அடிமைப்படுத்துகிறது.மரபுகளை உடைக்கவேண்டும். தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்க, எதனையும் மரபாக வளரவிடக் கூடாது" என்ற கொள்கையில் மரபுகளை அழிப்பதிலும் புதிய மரபுகள் உருவாகுவதைத் தடுப்பதையுமே உள்ளடக்கமாகக் கருதுகிறார்கள். "முதலாளித்துவத்தின் மரபுகள் மக்கட் பண்டைச் சீரழிப்பதாகக் கட்டும் அதேசமயம் சோசலிசச் சமுதாயம் வளர்வது தனிமனிதச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி அழித்துவிடும்" என்றும் கருதுகிறார்கள்.

ஃப்ராய்டியர்கள் வாழ்க்கையின் இயக்குசக்தி 'இன்ப ஆர்வம்’ என்று கருதுகிறார்கள். இது இணை விழைச்சுத்