பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

வானமாமலை


தன்மை கொண்டது. மனிதனது இயற்கையான இன்ப ஆர்வத்திற்கு மனிதன் தன்னைச்சுற்றிக் கட்டிக்கொண்டுள்ள சமுதாயமும் அதன் மதிப்புகளும் தடை விதிக்கின்றன. அப்போது இன்ப ஆர்வம் அடிமனத்திலிருந்து ஆழ்மனத்திற்குச் சென்றுவிடுகிறது. இவ்வாறு ஆழ்மனம் வலிமைபெற்று வளருகிறது. அடிமனம் கவனமற்றிருக்கும்போது ஆழ்மன உணர்ச்சிகள் அடிமன மேற்பரப்பிற்கு வருகின்றன. ஆழ்மன உணர்ச்சிகளை நாம் அறிய முடியாது; அடிமனத்தில் வெளிப்படும்போதுதான் அறியமுடியும். அடிமனத்தைவிட ஆழ்மனமே மனிதனது செயல்களுக்குக் காரணமாகிறது. மனிதன் அறிந்து செயல் புரிவது மிகக் குறைவான எல்லைக்குள்தான். மிகப் பெரும்பான்மையான செயல்களை, ஆழ்மனச் செயல்களை, ஆழ்மனச் செல்வாக்கால்தான் செய்கிறான். இக்கொள்கை முற்போக் கான சித்தனாவாதிகளின் தாக்குதலைச் சமாளிக்கத் தனது கொள்கைகள் சிலவற்றை மாற்றிக்கொண்டுள்ளது. ஜூங், ஹிட்லர் என்பவர்கள் வாழ்க்கையின் இயக்கு சக்திகளாக, போட்டி உணர்ச்சி, புகழாசை முதலியவற்றைச் சேர்த்துக் கொண்டார்கள். ஃப்ராம் என்பவர், உண்மையான கம்யூனிசம் புதிய ஃப்ராய்டிசம்தான் என்று வாதித்தார். மார்க்சின் புற உலகப் புரட்சியையும், ஃப்ராய்டின் அக உலகப் புரட்சி யையும் இணைத்து மார்க்சின் கொள்கையைப் புதுப்பிக்க வேண்டுமென்று எழுதினார். மார்க்ஸை எதிர்த்த ஃபிராய் டிஸ்டுகள் இப்போது மார்க்சீயத்தைத் திருத்த முன்வந்திருக் சிறார்கள். புதிய பிராய்டியர்களுக்கு அடிமனம் ஆழ்மனமாவதும் ஆழ்மனச் சிக்கல்களின் செயல்பாடுகளுமே இலக்கியத்தின் உள்ளடக்கம்.

மேற்கூறியவை, பல்வேறு தத்துவச் சார்புடையவர்கள் எவ்வாறு உள்ளடக்கம் பற்றி வெவ்வேறு கொள்கையுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை விளக்கும். உள்ளடக்கத்தின் இரு கூறுகள்

மனிதநேச இலக்கியவாதிகள், சமூகப் புரட்சியை விரும்பும் மார்க்சீயவாதிகள், உலகிமுரண்பர்டுகளைக் காணும் யதார்த்தவாதிகள் இன்னும் பல முற்போக்கு இலக்கியவாதிகள் உள்ளடக்கம்பற்றி என்ன சிந்திக்கிறார்கள் என்று விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். இச்சிந்தனைகள் மார்க்சீயச் சிந் தனையின் தாக்கம் பெற்றுள்ளன. அடிப்படையில் மார்க்சீயத்தின் கருத்துக்களே இவை. உள்ளடக்கம் இரண்டு நிலைகளில் சிந்திக்கப்படுகிறது.