பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கி பமும் இலக்கிபக் கல்வியும்: வேறுபாடுகள் 勤星3> தால் ஏற்க மறுக்கிறோம் (டாஸ்டாயெவ்ஸ்கி, கால்ஸ்வர்த்தி). கவிதையில் வரும் ஒவ்வோர் உருவகத்தையும் நம் அகக் கண்முன் கொண்டுவரலாகாது. உளவியல் வினாக்களைப் (பிரச்சினைகளை) போட்டுக் குழப்பக்கூடாது. இவ்வுத்திகள் உளவியல் இயல்பிற்கு ஏற்ப அமைந்தவை. உருவகங்கள் ٹونمنٹ மொழிகளினின்றும் கொச்சைமொழிகளில் இருந்தும் பெரும் பாலும் பெறப்படும். சில நுண்பொருள்கள், பருப்பொருள் களினின்றும் கொள்ளப்பட்டவை. பூ-உள்ள மென்மை; சூரியக்கதிர்-அறிவொளி; மேகம்-உள்ள வேதனை. பல நாகரிகங்களின் (கிரேக்க, கிறிஸ்தவங்கள் கற்பனை உருவகங் களை (பிரமோதியூஸ், ஹெலன், கிளியோபாட்ரா, ஷைலக், ஹாம்லெட், ஆலிவர் டிவிஸ்டு (டிக்கன்ஸ்) போன்றவை) தற்கால இலக்கியம் பயன்படுத்தும். இலக்கியம், இலக்கியமல்லாதது வேறுபாடுகள்-முன்னர் கண்டோம். 1 உணர்வுகளை வெளியிடுதல் 2 ஓர் அடித்தளத்தின் தேவையை உணர்ந்து அதனை அமைத்தல் 3 நடைமுறையில் நோக்கங்கள் இல்லாதிருத்தல் 4. புனைநிலை, இலக்கியத்தின் தன்மைகள் எந்த ஒரு தனிக்கூற்றும் இலக்கியத்தை விளக்கவியலாது. இலக்கிய உட்பொருள், இலக்கிய உத்தி, வேறு எதுவும் முழுமையாக்கிவிடக்கூடாது. இச்சொற்கள் பல்வேறுபட்ட பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றன. தற்கால ஆய்வு இதைவிடச் சிக்கலான வினாக்களுக்கு-அதாவது கலைப் படைப்பு எவ்வாறு உருப்பெறுகின்றது, அதனை ஆக்குபவை எவை என்ற வினாக்களுக்கு விடை காணவேண்டும். இலக்கியமும் சமுதாயமும் சமுதாயப் படைப்பான மொழியைத் தனது இடைநிலைத் தளமாக இலக்கியம் கொண்டுள்ளது. எனவே அது சமுதாயப் பாங்கானது. இலக்கியப் படைப்பாளி சமுதாய உறுப்பினன். அவன் ஒர் அவையினரிடம் பேசுகிறான். எனவே இலக்கியம் சமுதாயத்தன்மை-சமுதாயப் பிரச்சினை. அழகியல் நிலை பங்கள், சமுதாய நிலையங்களை அடிப்படையாகக் கொண்