பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

வானமாமலை


பாளியின் உள்ளத்தின் வழியே சென்று மீளும்போது வாசகர் உள்ளத்தைக் கவர்ந்து உணர்ச்சியூட்டும் கலைப்படைப்பாக மாறுகிறது. புறவய உண்மையும் கலை உண்மையும் ஒன்றாக இருப்பதில்லை.

டால்ஸ்டாயின் 'அன்னாகரீனினா' என்னும் நாவல் உலகப்புகழ் பெற்றது. இதைப்பற்றி பெர்னார்ட்ஷா, "அரசியல் சமூகக் காட்சிகளின் பின்னணியில் டால்ஸ்டாய் உலகத் தைப் பார்க்கிறார். நாமோ ஓர் இருளடர்ந்த குழிக்குள்ளிருந்து காண்கிறோம்" என்று எழுதினார். தாமஸ்மான் (ஜெர்மன் எழுத்தாளர்) எக்காலத்திலும் படைக்கப்பட்ட நாவல்களில் தலைசிறந்தது 'அன்னாகரீனினா' என்று சொல்ல நான் தயங்கமாட்டேன்” என்கிறார்.

தியோடார் ட்ரீசர் என்னும் புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியர் பின்வருமாறு எழுதினார்: "தற்காலத்தில் ஒரு மனிதன் டால்ஸ்டாயைப்போல் எழுதி, உலகமுழுவதையும் கவர்வானானால்...” டாஸ்டாயெவ்ஸ்கி என்ற ரஷிய நாவலாசிரியர் கூறுகிறார். "மனித ஆண்மையை இவரைப்போல் வல்லமையோடு கையாண்டவர் வேறு யாராவது உண்டா?” .

இவர்களெல்லாரும் டால்ஸ்டாய் காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர்கள். இவர்களுடைய கூற்றுக்களைத் தற்கால இலக்கிய விமர்சனம் உறுதி செய்கிறது.

டால்ஸ்டாயின் நாவலின் உள்ளடக்கம் என்ன? அவர் காலத்தின் ஆளும் வர்க்கத்தின் (நிலவுடைமை வர்க்கம்) ஆன்மீக மதிப்புகளின் சீரழிவைச் சித்தரிப்பதுதான் அவரது நாவலின் உள்ளடக்கம், புறஉலக நிஜமாந்தர்கள் அவருடைய நாவலில் கலை உலக மாந்தர்களாகப் புனர்ஜென்மம் எடுக்கிறார்கள். அவர்களுடைய உள்ளங்களை வாசகன் வெகு நுணுக்கமாக நாவல் மூலமாக அறிகிறான். நமக்கு மிகவும் பழக்கமான மனிதர்களைவிட இக்கற்பனை மனிதர்கள் நம்மோடு நெருங்கிய உள்ளத்தொடர்பு கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தம்மிடையே ஏற்படுத்திக்கொள்ளும் உறவுகள், முரண்பாடுகள், போட்டிகள், கடமைகள், பகட்டு, சமுதாய மதிப்புகள், கலாரசனை, பண்பாட்டுப் போலி மதிப்புகள், காமக்களி பாட்டங்கள் அனைத்தும் வர்க்கநலம், சுயநலம் என்னும் இரண்டு தூண்களின்மீது எழுப்பப்பட்டிருக்கும் மேற்கோப்புகளே.

டால்ஸ்டாய் தம் காலத்துச் சமுதாய மாந்தர்களையும் அவர்களிடையே நிகழும் உறவுகளையும் மிக நுணுக்கமாக உணர்ந்திருக்கிறார். இதுதான் அவருடைய நாவலின் உள்