பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

15


புறவயஎழுத்தாளன்அகவய

உண்மைஉள்ளம்படிமங்கள்

எனவே புறவய உண்மையின் சில கூறுகளைப் படைப்பாளி தன் மன உள்ளடக்கத்தின் வழியே காணும்போது அவன் மனத்தில் அகப்படிமங்கள் தோன்றுகின்றன. அவற்றைத் தனது கலைத் திறனால் அவன் கலைப்படைப்பாகப் படைக்கிறான்.

மேற்குறிப்பிட்ட உதாரணங்களில் நிலச்சீர்திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட காலத்தில் இருந்த சமூக நிலைகள் தான் நாவல்களின் பொருள். அவை பல்வேறு விதமாகக் கலைப் படைப்பாக்கப்பட்டுள்ளன. ஒரே செய்தி, காலத்தின் சமூக மதிப்பு மாற்றத்தாலும் கலைஞன் இம்மாற்றத்தை அறிவதில் உள்ள வேறுபட்ட கண்ணோட்டங்களாலும் வெவ்வேறு தன்மையுள்ள கலைப்படைப்புகள் தோன்றலாம். கவிதை வரலாற்றிலிருந்து இக்கருத்துக்கோர் உதாரணம் தருவோம். அகலிகை இந்திய இலக்கியங்களில் கவிஞர்களைக் கவர்ந்த பாத்திரம்; காலத்திற்கு காலம் மாறுபட்டு வளர்ச்சி பெறும் கருத்தோட்டங்களுக்கேற்பக் கவிதையில் படைக்கப்பட்ட இக் கதாபாத்திரம் தன்மையில் மாறுபடுகிறது.

பழமை மதிப்பு மாற்றப்படுதல்

வான்மீகரின் அகலிகை, வயது முதிர்ந்த கோதமரின் மனைவி. மனைவியென்ற சமூக வரலாற்றுக் கருத்தமைப்பின் சுமைகளைத் தாங்கி நிற்பவள். இந்திரனால் காதலிக்கப்பட்டவள், பின்பு காதலில்லாமல் கலியாணம் செய்துகொண்டவள். இவள் பத்தினியென்னும் சமூக மதிப்பிற்குப் பணிந்து போகிறாள். கணவனைத் தவிர வேறொருவனை அழகாக இருக்கிறானே என்று எண்ணியதால் வழக்கமாகச் செய்யும் மனித சக்தியை மீறிய செயலைச் செய்ய முடியாமல் தவிக்கிறாள். மனதில் களங்கம் ஏற்பட்டதால் அவளுடைய கற்பின் சக்தி போய்விடுகிறது. இந்திரன் கோழியாகக் கூவி, காலப்பிழையைக் கோதமன் மனத்தில் தோற்றுவித்து அவரைப் பர்ணசாலையை விட்டுச் செல்ல வைத்து அவருடைய உருவம் கொண்டு அகலிகையைச் சேருகிறான். இது வஞ்சகமான ஏமாற்று. நேரமாகவில்லை என்று திரும்பிய கோதமர் அவனைக் கண்டு சாபமிடுகிறார். அகலிகை யார் தொடுகிறார்கள் என்று உணர முடியாதவளாக இருந்ததால் உணர்வற்ற கல்லாகப் போகும்படி சபிக்கிறார். ஏக பத்தினி விரதனான ராமன் கால் தூசிபட்டதும் அவள் மீண்டும் மனித உருப்பெற, கோதமன் சாப