பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்

17


தோன்றுகிறது. சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்ல முடிவு செய்த இந்திரன் மாற்றுருவம் கொண்டு தன்னை ஏமாற்றிய கோதமனை ஏமாற்றி அகலிகையைச் சேருகிறான். அவளுக்கு இந்திரனின் இளமை வேகம், கோதமனின் அமைதிப்போக்குக்கு வேறுபாடாகத் தெரிகிறது. அவள் தெரிந்துகொள்கிறாள். தவறென்னும் எண்ணத்தை இன்பமென்னும் வெள்ளம் மூழ்கடித்துவிட்டது. இதனை ச.து.சு. யோகி வருணிக்கிறார். கோணல் முடிச்சு விழுந்த பின் இப்படி நடப்பதுதான் இயல்பு என்று கூறி, கோணல் முடிச்சைச் சாடுகிறார். இக்கதையைத் தற்காலத் திருமண உறவுகளின் கோணல் முடிச்சுகளின் அடிப் படையில் உருவான் உலகக் கண்ணோட்டத்தின் தாக்கத்தில் கதை நிகழ்ச்சிகளாக மாற்றுகிறார். முடிவில் "உளக்குற்றம் இல்லையெனில் உடற்குற்றம் எவ்வாறாகும்?" என்று கம்பனைப் பார்த்துக் கேட்கிறார். ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூக மதிப்புகளின் நோக்கில் தோன்றிய படிமம் பிற்காலக் சமூக மதிப்புகளில் முன்னேறிய கவிஞன் பார்வையில் மாற்றமடைகிறது. அகலிகை படிமம், வெவ்வேறு வரலாற்றுக் காலங்களில், கவிஞர்களின் உலகக் கண்ணோட்டம், சமூக மதிப்புகள் ஆகிய அகவய உள்ளடக்கத்தின் தன்மையால் மாறியுள்ளது.

இதுபோலவே வான்மீகரின் சீதைப்படிமம் கம்பனாலும் எழுத்தத்சனாலும் துளசிதாசராலும் குமரன் ஆசானாலும் மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு சீதைப் படிமத்திலும், காலத்தின் சிந்தனையையும் கவிஞனின் அகவய உள்ளடக்கத்தின் முத்திரையையும் காண்கிறோம். இக்கருத்தை விளக்க மலையாள மகாகவி குமரன் ஆசானின் சிதைப்படிமத்தை உதாரணமாகக் காண்போம்.

ராவணனுடைய சிறையிலிருந்து சீதை மீட்கப்படுகிறாள். அவள் உள்ளத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஒடுகிறது. அனுமன் அவளை இராமனிடம் அழைத்து வருகிறான். அவளிடம் காணப்படும் மகிழ்ச்சி ராமனிடம் காணப்படவில்லை. ராவணனைத் தோற்கடித்த பின் அவன் சக்கரவர்த்தி என்னும் தகுதியைப் பெற்றுவிட்டான். உலகம் சிதை 'சிறையிருந்தாள்' என்று பழிதூற்றும் சீதை மாசில்லாதவள் என்று உலகத்திற்கு நிரூபிக்க ராமன் விரும்புகிறான். தீப்புகுந்து கற்பை நிரூபிக்க ராமன் கட்டளையிடுகிறான். அனுமனும் இலக்குவனும் ராமன் மனப்போக்கைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள். இதையும் அதிர்ச்சி அடைகிறாள். ராமனிடம் ஏன் இம்மாறுதல்? சக்கரவர்த்தியின் மனைவி குற்றமற்றவள் என்று நிரூபித்துக்காட்ட அவள் கணவன் விரும்புகிறான். முன்பு கணவனாக

49/2